கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருவனந்தபுரம் : கேரளாவில் 4 மாவட்டங்களில் நாளை கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது பருவமழை அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கனமழையால் அசாம், பீஹார், உத்தரகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். தற்போது கேரளாவின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மழை இன்னும் தீவிரமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


latest tamil news



இது தொடர்பாக இன்று அம்மையம் கூறுகையில், கேரளாவின் மத்திய பகுதிகள் மற்றும் தெற்கு பகுதிகளில் தற்போது கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் நீர் சூழ்ந்து, சில பகுதிகளில் மண்சரிவும் ஏற்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழையால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



கேரளாவில் இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நாளை அதிகமான மழைபொழிவு கனமழை இருக்கும். அதனால் அம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு மஹாராஷ்டிராவின் பல்வேறு பிராந்தியங்களிலும் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும். இவ்வாறு தெரிவித்தது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
03-ஆக-202007:12:32 IST Report Abuse
Balasubramanian Ramanathan தமிழகத்திற்ககும், தமிழர்களுக்கும் தொடர் வழிகாட்டியாக விளங்கும் கேரள செய்திகளை தொடர்ந்து தருவதற்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X