புதுடில்லி: பிரதமருக்கு மட்டுமே பாதுகாப்பு அளிப்பது என்ற முடிவை அடுத்து எஸ்.பி.ஜி.யின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட உள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: எஸ்.பி.ஜி., என்றழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு பல்வேறு வி.ஐ.பிக்களுக்கான பாதுகாப்பை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 1984 ம் ஆண்டு பிரதமர் இந்திரா படு கொலை செய்யப்பட்ட பின்னர் விஜபிக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கென 1985 ம் ஆண்டில்உருவாக்கப்பட்ட து எஸ்.பி.ஜி. பிரதமர் அலுவலகம் மற்றும் வி.வி.ஐ.பி நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ ஒரு இடத்திற்குச் செல்ல திட்டமிடப்படும் போது முன்கூட்டியே பாதுகாப்பு தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இக்குழுவில் துணை ராணுவம் மற்றும் ஆயுத போலீஸ் படை ,மாநில போலீஸ் பிரிவுகளில் இருந்து அதிகாரிகள் இக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதில் கமாண்டோ பயிற்சி பெற்றவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் எஸ்பிஜி சட்டத்தை மத்திய அரசு திருத்தியது. அதன்படி பிரதமர் மற்றும் அவருடன் ,உத்தியோகபூர்வ இல்லத்தில் வசிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களை மட்டுமே பாதுகாக்க அனுமதிப்பது என சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து வி.ஜ.பி.,க்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது.
இது குறித்து எஸ்.பி.ஜி அமைப்பின் உயர் அதிகாரிகள் கூறி இருப்பதாவது: வி.ஐ.பி.,பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிலிருந்து விலக்கி கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் தங்களது சொந்த படை பிரிவுக்கு மாற்றப்பட உள்ளனர். அதே போல் பிரதமர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எஸ்.பி.ஜி.,யிலும் பணியாளர்களின் எண்ணிக்கை 50 முதல் 60 சதவீதமாக இருக்கும்.
இந்த அமைப்பில் பணிபுரியும் பல்வேறு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை ஒரே நேரத்தில் திருப்பி அனுப்பபுவது என்பது இதுவே முதல்முறையாகும் என தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE