பொது செய்தி

இந்தியா

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கு மத்திய அரசு அனுமதி: நவ.,10ம் தேதி பைனல்

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
IPL, Indian Premier League, UAE, பிரீமியர் லீக்

புதுடில்லி: பிரீமியர் லீக் தொடரை யு.ஏ.இ., மண்ணில் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. நவ. 10ம் தேதி பைனல் நடக்க உள்ளது.

இந்தியாவில் நடக்க இருந்த 13வது பிரீமியர் லீக், சீசன், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே ஆஸ்திரேலிய மண்ணில் நடக்க இருந்த 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரை ஐ.சி.சி., ரத்து செய்தது. இதனால் வரும் செப்., 19-நவ. 8 ல் பிரீமியர் லீக் தொடரை நடத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்தது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடத்தவும் பி.சி.சி.ஐ., தயாரானது. இதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது. மத்திய அரசின் அனுமதிக்காக பி.சி.சி.ஐ., காத்திருந்தது.

இந்நிலையில் பிரீமியர் லீக், கட்டுப்பாட்டுக்குழு கூட்டம் இன்று(ஆக.,2) காணொலி வாயிலாக நடந்தது. பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி, பிரீமியர் லீக், தலைவர் பிரிஷேஸ் படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் இதில், ஐக்கிய அரபு எமிரேட்சில் பிரீமியர் லீக், தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தவிர, இத்தொடருக்கான முழு அட்டவணை மற்றும் கொரோனா அச்சம் காரணமாக 8 அணிகளின் நிர்வாகம், பயிற்சியாளர்கள், வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், மத்திய அரசு அன்னிய மண்ணில் தொடரை நடத்த அனுமதி கொடுத்தது தெரியவந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின் வருமாறு:


latest tamil news



* பிரீமியர் லீக், தொடரின் பைனல், அணி நிர்வாகிகள் விருப்பத்துக்கு ஏற்ப நவ. 10ல் நடக்கும். முதல் முறையாக பைனல் ஞாயிறு அல்லாமல் செவ்வாய் கிழமை நடக்கவுள்ளது.

* ஒவ்வொரு அணியிலும் 24 வீரர்கள் இடம் பெறுவர்.

* பெண்கள் பிரீமியர் லீக்., தொடர் நடத்த அனுமதி.

* பிரீமியர் லீக், 'டைட்டில் ஸ்பான்சராக' சீன நிறுவனம் தொடர அனுமதி.

* பிரீமியர் லீக், தொடர் 53 நாட்கள் நடக்கும். வார இறுதி நாட்களில் ஒரு நாளைக்கு 2 போட்டிகள் நடக்கும்.

* கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மாற்று வீரர் களமிறங்க அனுமதி.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaidy - Chennai,இந்தியா
03-ஆக-202015:10:29 IST Report Abuse
Vaidy ஏன் சீனா கம்பெனி ஸ்பொன்சர்? கொடுக்க கூடாது. இந்திய கம்பெனிக்கு தான் கொடுக்க வேண்டும். பண ஆசையால் எதிரிக்கு பணிய கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X