பா.ஜ.,வினர் 30 சதவீத சம்பளம் தரவில்லை :உத்தரகண்ட் காங்.,புகார்

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

டேராடூன்: கோவிட்-19க்கு எதிராக போராட 30 சதவீத சம்பளத்தை பா.ஜ.,வினர் வழங்கவில்லை என காங்., குற்றம் சாட்டி உள்ளது.



latest tamil news



உத்தரகண்ட் மாநில சட்டசபையில் பா.ஜ.,57 உறுப்பினர்களும், காங்., 11 உறுப்பினர்களும், சுயேட்சைகள் இரண்டுபேரும் உள்ளனர். காங்., கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., மனோஜ் ராவத் என்பவர் கோவிட்-19க்கு எதிராக போராட உறுப்பினர்கள் வழங்கிய நிதி குறித்து கடந்த மாதம் 14 ம் தேதிதகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

அவருக்குகிடைத்த பதிலில் காங்., கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏக்களும் கடந்த மே, ஜூன் மாதங்களில் ரூ.57 ஆயிரத்து 600 பங்களிப்பு செய்திருப்பதாகவும் , 57 பா.ஜ., உறுப்பினர்களில் 13 பேர் மட்டுமே ரூ.57 ஆயிரத்து 600-ம் ,16 பேர் ரூ.30ஆயிரமும், நான்கு பேர் ரூ.12 ஆயிரத்து600-ம் 3 பேர் ரூ.9 ஆயிரமும் பங்களிப்பு செய்துள்ளதாகவும் அதே நேரத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பங்களிப்பு குறித்து சட்டசபைசெயலகம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.


latest tamil news



இது குறித்து மனோஜ் ராவத் கூறுகையில் கோவிட் -19 நிவாரணம் குறித்து பா.ஜ.,வினர் காங்.,மீதுகுற்றம் சாட்டி வந்தனர். தற்போதைய தகவல் அறியும் உரிமை சட்டதின்படி கிடைத்த தகவலில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களே சொந்த அரசாங்கத்தின் முடிவை பின்பற்றவில்லை என்பதையே காட்டுகிறது. இது பா.ஜ.,வின் இரட்டை வேடத்தை காட்டுகிறது என கூறினார்.

உத்தரகண்ட மாநிலத்தின் ஒரு எம்.எல்.ஏ.வின் அடிப்படை சம்பளம் மாதம் ஒன்றிற்கு ரூ.30 ஆயிரம் ஆகும். அனைத்து சலுகைகள் சேர்த்தபின்னர் மாதம் ஒன்றிற்கு ரூ.3.25 லட்சம் வரையில் ஒரு எம்.எல்.ஏ.,வின் சம்பளம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
03-ஆக-202003:15:19 IST Report Abuse
தமிழ் வேந்தன் இரண்டு ரூபாய் சங்கிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X