பொது செய்தி

இந்தியா

மஹா.,வில் 9,926 பேர் ஒரே நாளில் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020
Share
Advertisement
Maharashtra, coronavirus, covid19

மும்பை: மஹா.,வில் இன்று(ஆக.,2) ஒரே நாளில் 9,926 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். இதனையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, 2,76,809 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில் அதிக கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. இந்நிலையில், அங்கு புதிதாக இன்று மட்டும் 9,509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 4,41,228 ஆக அதிகரித்தது.


latest tamil news


இன்று மட்டும் 260 பேர் பலியானதையடுத்து, மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 15,576 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 9,926 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனையடுத்து குணமாகி வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 2,76,809 ஆக அதிகரித்துள்ளது. 1,48,537 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X