அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் பூஜை நிகழ்ச்சி தூர்தர்ஷனில் நேரிடையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு பா.ஜ., கட்சி பதிலடி கொடுத்துள்ளது

வரும் ஆக., 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நடக்க உள்ளது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சியை தூர்தர்ஷனில் நேரிடையாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்து வருகின்றன. மதசார்பற்ற இந்தியாவில் மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை நேரிடையாக தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்வது இந்தியாவின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று கட்சிகள் எதிர்க்கின்றன
இந்நி்லையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் பிரதமர் இந்திரா 1980ம் வருடம், உ.பி., டியோபான்டில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளது பா.ஜ., கட்சி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ அந்த காலகட்டத்தில் தூர்தர்ஷனில் நேரிடையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய இந்திரா , ' தாரூல் உலூம் இந்தியாவுக்கும் உலகிற்கும் இஸ்லாமிய பாரம்பரியத்தில் உண்மையான சேவை செய்வார்' என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் என்ன பதில் சொல்வார்கள், என்று பா.ஜ., கேள்வி கேட்டுள்ளது.
முன்னதாக சிபிஐ கட்சி, அயோத்தி ராமர் கோவில் பூஜை நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பினை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. கடிதத்தில், ' மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியினை தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்வது இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்கு எதிரான செயல். எனவே அதை தடை செய்ய வேண்டும்' என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா உறுப்பினர் காமேஷ்வர் சவ்பால் கூறுகையில், ' சிபிஐ கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முகாந்திரமே இல்லை. அது அரசியல் அமைப்பையே இழந்து விட்டது. சீனாவில் உள்ள அவர்கள் கட்சி தலைவர்களுக்கே இங்கு இந்தியாவில் வரவேற்பு இல்லை' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“Darul Uloom will continue to serve India and the world in true Islamic tradition.”
Rare video of Indira Gandhi's speech at Deoband in 1980.
What do people opposing the telecast of Bhumi Pujan for the Ram Temple on DD have to say about DD broadcasting Indira's visit to Deoband? pic.twitter.com/4vBAzV8KZm
— BJP (@BJP4India) August 2, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE