பஹ்ரைனில் கொரோனாவை பரப்ப முயன்றவருக்கு 3 ஆண்டு சிறை

Updated : ஆக 02, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

பனாமா : பஹ்ரைனில் கொரோனா தொற்று நோயாளி ஒருவர் வேண்டுமென்றே மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனாவை பரப்ப முயன்றதால் அவருக்கு 3 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.



latest tamil news



பஹ்ரைனில் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தலாகவே உள்ளது. தொற்று பாதிப்புகளை குறைக்க பஹ்ரைன் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா தொற்று பாதித்த நோயாளி ஒருவர், தனது முக கவசத்தை வேண்டுமென்றே கழற்றிவிட்டு, மருத்துவ ஊழியர்களுக்கு முன் இருமியதால் அவருக்கு விதிமீறலின் அடிப்படையில் அபராதத்துடன் (BD 1,000) 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news



இதுகுறித்து சுகாதாரதுறை கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் தொற்று பரிசோதிக்கப்பட்ட பிறகு, தனது முக கவசத்தை (மாஸ்க்) வேண்டுமென்றே கழற்றி விட்டு, மருத்துவ ஊழியர்களுக்கு முன் இருமியுள்ளார், பின் தன் கைகளில் மூச்சு திணறலை உள்ளிழுத்து, விரைவாக தொற்றை பரப்புவதற்காக மருத்துவர்களை தொட்டார். இது போன்ற விதிமீறல் / குற்ற செயல்களுக்காக தண்டனையை கீழ் குற்றவியல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இவ்வாறு தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
03-ஆக-202011:55:43 IST Report Abuse
Lion Drsekar இங்குதான் காவலர்களுக்கு இருக்கும் எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டதே? கைகளில் தடி கூடாது, அடிக்கக்கூடாது, திட்டக்கூடாது, சுடக்கூடாது, தகுந்த ஆதாரம் இல்லாமல் கைது செய்யக்கூடாது, அப்படி இருக்க அவரவர்கள் தங்களின் சட்டங்களைக் கைகளில் எடுத்துக்கொண்டு அவரவர்கள் ஆட்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள், மீண்டும் பழைய காலங்கள் வரப்போகிறது, மக்களைப் பற்றியோ சுகாதாரத்தைப்பற்றியோ எந்த ஒரு கவலையும் இல்லாமல் அருமையான அமைப்பு, பாராட்டுக்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
03-ஆக-202011:31:25 IST Report Abuse
ஆரூர் ரங் டெல்லி தப்பு மாநாட்டுக்கு வந்து டிரெய்னிங் எடுத்தவனோ?
Rate this:
Cancel
03-ஆக-202006:55:43 IST Report Abuse
chandran, pudhucherry எச்ச துப்பின கூட்டத்தை எதுவும் செய்யாமல் கலெக்டர் வந்து பழ கூடை தந்து கை எடுத்து கும்பிட்டு மரியாதையுடன் ஆம்புலன்ஸ் ல வீட்டுக்கு அனுப்பி... செக்குலர் கன்ட்ரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X