உ.பி., அமைச்சர் கமல் ராணி கொரோனாவால் மரணம்

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 உ.பி., அமைச்சர் கமல் ராணி கொரோனாவால் மரணம்

லக்னோ; கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட, உ.பி., மாநில தொழிற்கல்வி துறை அமைச்சர், கமல் ராணி வருண், நேற்று உயிரிழந்தார்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இம்மாநிலத்தில் ஒரே பெண் கேபினட் அமைச்சராக இருந்தவர், கமல் ராணி வருண், 62. கொரோனா வைரசால் இவர் பாதிக்கப்பட்டது, 18ம் தேதி உறுதியானது.இதனால், ஷியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் சஞ்சய் முதுகலை மருத்துவ அறிவியல் மையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று காலை, 9:30 மணிக்கு உயிரிழந்தார்.அமைச்சரின் மரணம் குறித்து, மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:முதற்கட்ட சிகிச்சையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.

ஆனால், சில நாட்களில் உடல்நிலை மோசமடைந்ததால், 'பிளாஸ்மா தெரபி' சிகிச்சை அளிக்கப்பட்டது. டில்லியின், 'எய்ம்ஸ்' மருத்துவமனை இயக்குனர், ரன்தீப் குலேரியா ஆலோசனைகளும் கருத்தில் கொள்ளப்பட்டன. ஆனால், உயர் ரத்த அழுத்தம் பிரச்னை மற்றும் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில், அவரது உடல்நிலை மிக மோசமானது. இதையடுத்து, அவர் காலமானார்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.அமைச்சரின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து, முதல்வர், யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''கமல் ராணி வருண், தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலனுக்காக, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய மக்கள் பிரதிநிதி,'' எனக் கூறியுள்ளார்.முதல்வர், யோகி ஆதித்யநாத், நேற்று, அயோத்தி செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

அமைச்சரின் மரணத்தால், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. கான்பூரின், கட்டம்பூர் தொகுதி, எம்.எல்.ஏ.,வான கமல் ராணி, ஏற்கனவே, இருமுறை லோக்சபா, எம்.பி.,யாக இருந்துள்ளார். உ.பி.,யின், ஒரே பெண் அமைச்சரான கமல் ராணியின் மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உ.பி., சபாநாயகர் ஹிருதே நாராயண் தீட்சித் உள்ளிட்ட, பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.மறைந்த அமைச்சர் கமல் ராணிக்கு, ஒரு மகள் உள்ளார். அரசு மரியாதையுடன், கமல் ராணியின் உடல், லக்னோவில் உள்ள பைரோகட் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஆக-202022:25:17 IST Report Abuse
தல புராணம் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி: ராமர் கோவில் பூமி பூஜை குறித்து வெங்கையா
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
03-ஆக-202022:24:23 IST Report Abuse
தல புராணம் ஆட்டுக்கு முகக்கவசம் இல்லைன்னு கைது செய்யும் மூடர் கூட்டம்.. 5000 கோடி ராமர் காப்பாத்தலை, அதுக்கு கோவிலை தொறக்க மும்முரமாக இருக்கும் மூடர் கூடம்.. அமைச்சருக்கே அரோகரா.. எந்த கவசமும் காப்பாத்தலை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X