வேட்பாளராக டிரம்பை அறிவிக்கும் கூட்டத்தை எளிமையாக நடத்த முடிவு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

வாஷிங்டன்; டொனால்டு டிரம்பை, அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளராக, அந்த கட்சியினர் முறைப்படி பரிந்துரைக்கும் கூட்டத்தை, கொரோனா பிரச்னை காரணமாக எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடக்கவுள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் மந்தநிலையில் உள்ளது. இந்நிலையில், குடியரசு கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளராக, டொனால்டு டிரம்பை, முறைப்படி மறு பரிந்துரை செய்வதற்காக, அந்த கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம், வடக்கு கரோலினாவின் சார்லோட் நகரில், வரும், 24ல் நடக்கிறது. இதில், குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் ஓட்டளித்து, டிரம்பை, அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக முறைப்படி மறு பரிந்துரை செய்வர். வழக்கமாக, அதிபர் தேர்தல்களில் இதுபோன்ற மறு பரிந்துரை கூட்டங்கள் மிக பிரமாண்டமாக நடக்கும். வாக்காளர்களை கவர்வதற்கும், பிரசாரத்துக்கும், இதை, அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் பயன்படுத்துவர். பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இந்த கூட்டம் நடக்கும். தற்போது கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, பத்திரிகையாளர்கள் இல்லாமல், மிக எளிமையாக இந்த கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

'கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, கட்சி பிரதிநிதிகள், வடக்கு கரோலினாவுக்கு வருவதில் பிரச்னை உள்ளது. அனைத்து பிரதிநிதிகளும் போதிய இடைவெளியில் அமர வேண்டியுள்ளதால், இடப் பிரச்னையும் உள்ளது.எனவே, இந்த கூட்டத்தை எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என, குடியரசு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 'குடியரசு கட்சியின் அதிபர் தேர்தல் வரலாற்றில், வேட்பாளரை மறு பரிந்துரை செய்யும் கூட்டம், மிக எளிமையாகவும், பத்திரிகையாளர்கள் இல்லாமலும் நடப்பது, இது தான் முதல் முறை' என, அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X