30 ஆயிரம் சீன செயலிகள் நீக்கம் 'ஆப்பிள்' அதிரடி நடவடிக்கை

Added : ஆக 02, 2020
Share
Advertisement

லாஸ் ஏஞ்சலஸ்; வழிமுறைகளை பின்பற்ற தவறியதால், 'ஆப்பிள்' நிறுவனம், 'சீன ஆப் ஸ்டோரில்' இருந்து, 29 ஆயிரத்து, 800 செயலிகளை நீக்கி, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில், 'ஆப்பிள்' நிறுவனம், 'கேம் டெவலப்பர்' எனப்படும், மொபைல் போனில் தரவிறக்கம் செய்யப்படும் விளையாட்டுகளை உருவாக்குவோருக்கு, சில கட்டுப்பாடுகளை விதித்தது.அதன்படி, கேம்களை பதிவேற்றுவதற்கு முன், அரசின் ஒப்புதலை பெறவேண்டும் என்றும், அதற்கான உரிம எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதற்காக, ஜூன் வரை அவகாசமும் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு, அந்த செயலிகள் சென்றடைய வேண்டும் என்றால், இந்த வழிமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, வழிமுறைகளை பின்பற்ற தவறிய டெவலப்பர்களின் செயலிகளை நீக்கும் நடவடிக்கைகளை, கடந்த ஜூலை முதல், ஆப்பிள் நிர்வாகம் துவங்கியது.

ஜூலை முதல் வாரத்தில், 2,500க்கும் மேற்பட்ட செயலிகள் நீக்கப்பட்டன.இந்நிலையில், உத்தரவுக்கு அடிபணிய மறுத்துள்ள, சீன கேம் டெவலப்பர்கள் மீதும், ஆப்பிள் நிர்வாகம், நடவடிக்கையை துவங்கியுள்ளது. சீன ஆப் ஸ்டோரில் இருந்து, 29 ஆயிரத்து, 800 செயலிகளை, ஆப்பிள் நிறுவனம் நேற்று நீக்கியுள்ளது.இதில், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை, கேம்கள் என தெரியவந்துள்ளது.

எனினும், இதுகுறித்து எந்த அறிக்கையையும், ஆப்பிள் நிர்வாகம் வெளியிடவில்லை.'ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோர்'கள் பல ஆண்டுகளாக இந்த வழிமுறைகளை பின்பற்றி வருகின்றன. ஆனால், ஆப்பிள் நிறுவனம், இப்போது தான் இதை கடுமையாக பின்பற்ற துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X