சர்ச்சைக்குரிய புதிய வரைபடம்: இந்தியாவுக்கு அனுப்புகிறது நேபாளம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

காத்மாண்டு; இந்திய பகுதிகளை உள்ளடக்கிய சர்ச்சைக்குரிய புதிய வரைபடத்தின் நகல்களை, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும், 'கூகுள்' நிறுவனத்துக்கும் அனுப்ப, நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

நம் அண்டை நாடான நேபாளம், சீனாவின் துாண்டுதலின் படி, சமீப காலமாக நம்முடன் மோதல் போக்கை பின்பற்றி வருகிறது.இரு நாட்டு எல்லையில் உள்ள கலாபானி, லிபுலேக், லிம்பியதுாரா ஆகிய பகுதிகளை, தங்களுக்கு சொந்தமானது என, உரிமை கோரி வருகிறது. இந்த பகுதிகள் இந்தியாவுக்கு சொந்தமானவை. சீனாவின் துாண்டுதலால், இந்த அடாவடியை நேபாள அரசு மேற்கொண்டுள்ளது. இந்த மூன்று பகுதிகளையும் உள்ளடக்கிய புதிய வரைபடத்தை, நேபாள அரசு தயாரித்துள்ளது. நேபாள பார்லிமென்டும், இதற்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேபாள நில மேலாண்மை துறை அமைச்சர் பத்ம ஆர்யால் நேற்று கூறியதாவது:கலாபானி, லிபுலேக், லிம்பியதுாரா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்தின் நகல்கள் அச்சிடப்பட்டுள்ளன.இது தான் எங்கள் நாட்டின் நிலப்பகுதிகள் என, உலக நாடுகளுக்கு தெரியப்படுத்துவதற்காக, இந்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் நகல்கள், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும், கூகுள் இணைய நிறுவனத்துக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. இதற்காக, 40 ஆயிரம் வரைபட நகல்கள் தயாராக உள்ளன.இவற்றில், ஆங்கில மொழியில் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். நேபாள மக்களுக்கும் இந்த வரைபட நகல்களை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X