பின்லாந்து பிரதமர் திடீர் திருமணம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

ஹெல்சின்கி; பின்லாந்து பிரதமர் சன்னா மரின், 16 ஆண்டுகள் அவருடன் நெருக்கமாக இருந்தவரை, நேற்று முன்தினம் மணந்தார்.ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிரதமராக, எட்டு மாதங்களுக்கு முன் பதவியேற்றவர், சன்னா மரின், 34. இவர், தன் நீண்டகால நண்பரான ரெய்கோனென் என்பவருடன், 16 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு, இரண்டரை வயது மகள் உள்ளார். இந்நிலையில், அவர்கள் இருவரும், நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இத்திருமண விழாவில், இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X