மதசார்பின்மை சிந்தனைகள்| Dinamalar

மதசார்பின்மை சிந்தனைகள்

Added : ஆக 02, 2020
Share
 மதசார்பின்மை சிந்தனைகள்

அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக நடத்தப்பட உள்ள அடிக்கல் நாட்டுவிழா, வரலாற்று சிறப்பு மிக்கது. ராமபிரானின் சிந்தனைகளும், மதசார்பின்மை கருத்துகளும் ஒன்று தான். ராமபிரானின் சிந்தனையும், செயல்பாடும், பல லட்சம் ஆண்டுகளான பின்னும், இந்திய மக்களின் எண்ணத்தில் கலந்துள்ளது.

வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி

ஜனநாயகத்துக்கு பாதிப்பு

அரசியல் கட்சி தலைவர்களை சட்டவிரோதமாக, மத்திய அரசு சிறையில் அடைத்துள்ளதால், இந்திய ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில், சட்ட விரோதமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தியை விடுதலை செய்ய சரியான நேரம் இது.

ராகுல்எம்.பி., காங்கிரஸ்

மக்கள் போராட்டம் நடத்துவர்

கொரோனாவால் ஏற்பட்ட பிரச்னைகளையும், வேலையில்லா திண்டாட்டத்தையும், மத்திய அரசு விரைவில் சரிசெய்ய வேண்டும். இல்லாவிடில், பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்துவர். இஸ்ரேலில், பிரதமர் நேதன்யாகுவை ராஜினாமா செய்ய கோரி, மக்கள் போராட்டம் நடத்தியது போல், இந்தியாவிலும் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும்.

சஞ்சய் ராவூத், எம்.பி., சிவசேனா

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X