பொது செய்தி

இந்தியா

பாலின சமத்துவத்தை ஊக்குவிக்க பெண் உருவ 'டிராபிக் சிக்னல்'

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 பாலின சமத்துவத்தை ஊக்குவிக்க பெண் உருவ 'டிராபிக் சிக்னல்'

மும்பை; மஹாராஷ்டிராவின் மும்பையில், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாக, பெண் உருவ, 'டிராபிக் சிக்னல்' விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் மும்பையில் உள்ள தாதர் பகுதியில், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாக, டிராபிக் சிக்னல்களில், பெண் உருவம், நடப்பது மற்றும் நிற்பது போன்ற சிவப்பு மற்றும் பச்சை நிற விளக்குகளை, மும்பை மாநகராட்சி பொருத்தியுள்ளது.

புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த சிக்னல் விளக்குகளின் புகைப்படங்களை, 'டுவிட்டரில்' வெளியிட்டு, மாநில சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே குறிப்பிட்டுஉள்ளதாவது:தாதர் பகுதியை இனி கடந்து சென்றால், நாம் பெருமையாக எண்ணும் விஷயம் நம் கண்ணில் தென்படும். டிராபிக் சிக்னல்களில், பெண்களுக்கும் இனி இடம் உண்டு. எளிய யோசனை மூலம், பாலின சமத்துவத்தை, மும்பை மாநகராட்சி உறுதிபடுத்தியுள்ளது.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாதர் - மஹிம் பகுதி இடையிலான, 4.5 கி.மீ., காடெல் சாலையில், 13 சந்திப்புகளில் உள்ள டிராபிக் சிக்னல்களிலும் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்தியாவில், பெண் உருவம் கொண்ட டிராபிக் சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள முதல் நகரமாக, மும்பை விளங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X