பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்...

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சோனியா 'டிஸ்சார்ஜ்'

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா, கடந்த ஜூலை, 30ம் தேதி, டில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு அனைத்து வித பரிசோதனைகளும் நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று பிற்பகல், மருத்துவமனையில் இருந்து சோனியா வீடு திரும்பினார். 'டிஸ்சார்ஜ்' செய்யும்போது, அவரின் உடல்நிலை சீராக இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பீஹாரில் ஒரு நாள் சட்டசபை கூட்டம்

பாட்னா: பீஹார் சட்டசபை மற்றும் சட்ட மேலவையில், இன்று ஒரு நாள் மட்டும் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. வரும் நவம்பரில், மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், 16வது சட்டசபையின் கடைசி கூட்டத்தொடராக இது பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இரு சபைகளின் நடவடிக்கைகள், கியான் பவன் அரங்கத்தில் இன்று நடைபெறவுள்ளன. இவற்றுக்கான ஒப்புதலை, மாநில கவர்னர் பாகு சவுஹான் வழங்கியுள்ளார். சட்டசபைக்கு வெளியே நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.

மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி: அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை முதன்மை செயலர்களுக்கும், மத்திய சுகாதாரத்துறை நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 'மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள், மொபைல் போன்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'அது, நோயாளிகள், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கலந்துரையாட, உதவியாக இருக்கும். இது, அவர்கள் நல்ல மனநிலையில் இருக்க வழிவகுக்கும்' என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷ சாராய பலி 98 ஆக உயர்வு

சண்டிகர்: பஞ்சாபில், விஷ சாராயம் குடித்த மேலும், 12 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலியானோர் எண்ணிக்கை, 98 ஆக உயர்ந்துள்ளது.இந்த விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X