கேரள தங்க கடத்தல் வழக்கு மேலும் ஆறு பேர் கைது

Added : ஆக 02, 2020
Share
Advertisement

புதுடில்லி; கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக, மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் வீடுகளில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயருக்கு வந்த பார்சலில், துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இதையடுத்து, சரித் குமார், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், கே.டி.ரமீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனமும், சுங்கத்துறையும் விசாரித்து வருகின்றன.

ஸ்வப்னா சுரேஷுடன், கேரள முதல்வரின் முதன்மை செயலராக பதவி வகித்து வந்த, சிவசங்கருக்கு, நேரடி தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு பற்றி என்.ஐ.ஏ., செய்தி தொடர்பாளர், நேற்று கூறியதாவது:தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக, மேலும், ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, கைதானவர்களின் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது. கடந்த, 30ம் தேதி, கே.டி.ரமீசுடன் இணைந்து சதி செயலில் ஈடுபட்ட, எர்ணாகுளத்தை சேர்ந்த ஜலால், மலப்புரத்தை சேர்ந்த ஆல்வி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த,31ம் தேதி, மலப்புரத்தை சேர்ந்த, முகமது ஷபி, அப்துல் ஆகியோரும், கடந்த, 1ம் தேதி, எர்ணாகுளத்தை சேர்ந்த் முகமது அலி இப்ராகிம், முகமது அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தங்க கடத்தல் விவகாரத்தில், இவர்களுக்கு உள்ள தொடர்பு தெரிய வந்ததையடுத்து, கைது செய்யப்பட்டனர்.

இதில் முகமது அலி, 'பாப்புலர் பிரன்ட்' அமைப்பை சேர்ந்தவர் என்பதும், பேராசிரியர் ஒருவரின் கையை வெட்டிய வழக்கில் கைதானவர் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் தொடர் புடைய, ஆறு இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X