தீவிரம்! கல்வராயன் மலையில் மரவள்ளி அறுவடை பணிகள்ஆதார விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீவிரம்! கல்வராயன் மலையில் மரவள்ளி அறுவடை பணிகள்ஆதார விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை

Added : ஆக 02, 2020
Share
கச்சிராயபாளையம் : கல்வராயன் மலையில் மரவள்ளி அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது. மரவள்ளி கிழங்கிற்கு அரசு சார்பில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்கல்வராயன் மலையில் 150 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் கால்நடை வளர்த்தல், விவசாயம்மற்றும் கடுக்காய் சேகரித்தல் போன்றவற்றை தங்களின் முக்கிய வாழ்வாதார தொழிலாக

கச்சிராயபாளையம் : கல்வராயன் மலையில் மரவள்ளி அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது.

மரவள்ளி கிழங்கிற்கு அரசு சார்பில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்கல்வராயன் மலையில் 150 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் கால்நடை வளர்த்தல், விவசாயம்மற்றும் கடுக்காய் சேகரித்தல் போன்றவற்றை தங்களின் முக்கிய வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ளனர். இப்பகுதிவிவசாயிகள் தக்காளி, பீன்ஸ், அவரை, முட்டைகோஸ், மிளகாய், வெள்ளரி போன்ற காய்கறிகள் மற்றும் சாமந்தி பூபோன்ற தோட்ட பயிர்களை சாகுபடி செய்யும் நிலையில் பெரும்பகுதி விவசாயிகள் மானாவாரி முறையில் மரவள்ளி மற்றும் மக்காசோளம் போன்ற பயிர்களை அதிகளவில் பயிர் செய்து வருகின்றனர்.

கல்வராயன் மலையில் ஆண்டு தோறும் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு, 30 லட்சம் டன்னிற்கு அதிகமாக மரவள்ளி கிழங்குகள் அறுவடை செய்யப் படுகிறது.ஜூன், ஜூலை மாதங்களில் விவசாயிகள் மானாவாரி முறையில் மரவள்ளி நடவு பணிகளை மேற்கொள்கின்றனர். 10 முதல் 12 மாதங்களில் மரவள்ளி கிழங்குகள் முற்றி அறுவடைக்கு தயாராகின்றன. கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் சாகுபடி செய்த மரவள்ளி பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் விவசாயிகள் மழையை எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில்கடந்த சில தினங்களாக கல்வராயன் மலையில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி தற்போது மரவள்ளி அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இங்கு அறுவடை செய்யப்படும் மரவள்ளி கிழங்குகள் சேலம், ஆத்துார், தலைவாசல், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் சேகோ ஆலைகளுக்கு இடைதரகர்கள் மூலம் அனுப்பி வருகின்றனர். வழக்கம் போல் இந்த ஆண்டும்மரவள்ளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது ஒரு டன் மரவள்ளி கிழங்குக்குரூ. 3500 முதல் 5000 வரை மட்டுமே விலை வழங்கப்டுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மரவள்ளி கிழங்கின் மூலம் தனியார்ஆலை உரிமையாளர்களும், இடைதரகர்களும் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர்.கொரோனா காலஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கல்வராயன் மலை விவசாயிகளுக்கு மரவள்ளி கிழங்கு கைகொடுக்கும் எனவிவசாயிகள் நம்பி இருந்தனர்.மரவள்ளி கிழங்கிற்கு அரசு சார்பில் ஆதார விலை நிர்ணயம் செய்யாததாலும், தனியார்ஆலை மற்றும் இடைதரகர்களின் சூழ்ச்சிகளாலும் மரவள்ளி விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் விவசாயி களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. உழவு செலவு, ஆள்கூலி, உரம் போன்றவற்றிற்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ 20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது மரவள்ளி கிழங்கிற்கு வழங்கும் விலை அறுவடை செலவு மற்றும் வண்டிவாடகை செலவிற்கு ஈடாகாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் கல்வராயன் மலையில் நடைபெறும் கோடை விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கல்வராயன் மலையில் விரைவில் அரசு சார்பில் சேகோ ஆலை உருவாக்கப்படும் என உறுதியளித்து செல்கின்றனர்.இதனை நம்பி இலவு காத்த கிளியின் நிலையாகவே இப்பகுதி மக்களின் நிலை உள்ளது.

கல்வராயன் மலையில் சேகோ ஆலை குறித்து அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் உறுதி மொழிகளும் காற்றில் கரைந்த கற்பூரமாகவே உள்ளது.இதனை தொடர்ந்து கல்வராயன் மலை பகுதி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மரவள்ளி கிழங்கிற்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X