பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் வரிப்பணம் ரூ.15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?

Updated : ஆக 03, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோவை; கந்த சஷ்டி கவசம் மீதான, 'கருப்பர் கூட்டத்தின்' அவதுாறு தாக்குதலின் விளைவாக, தமிழகம் முழுதும், தலைவர்களின், 2,000 சிலைகளுக்கு, 15 நாட்களாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், நாளொன்றுக்கு அரசுக்கு, 1 கோடி ரூபாய் வீதம், மக்களின் வரிப்பணம், 15 கோடி ரூபாய் வரை வீணடிக்கப்பட்டிருக்கிறது. தகுந்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்வதன் மூலம், இப்பிரச்னைக்கு
சிலை பாதுகாப்பு, மக்கள் வரிப்பணம், தீர்வு வருமா

கோவை; கந்த சஷ்டி கவசம் மீதான, 'கருப்பர் கூட்டத்தின்' அவதுாறு தாக்குதலின் விளைவாக, தமிழகம் முழுதும், தலைவர்களின், 2,000 சிலைகளுக்கு, 15 நாட்களாக போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், நாளொன்றுக்கு அரசுக்கு, 1 கோடி ரூபாய் வீதம், மக்களின் வரிப்பணம், 15 கோடி ரூபாய் வரை வீணடிக்கப்பட்டிருக்கிறது. தகுந்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்வதன் மூலம், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி, 'கருப்பர் கூட்டம்' என்ற, 'யு டியூப்' சேனலில் வீடியோ வெளியிட்ட, சென்னையைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகியோர், குண்டர் சட்டத்தில், சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, சமூக வலைதளங்களில், ஈ.வெ.ரா., ஆதரவாளர்கள் - ஹிந்து அமைப்புகளின் ஆதரவாளர்கள் இடையே, கருத்து மோதல் வெடித்தது.

கோவை, சுந்தராபுரத்தில், ஈ.வெ.ரா., சிலைக்கு காவிச் சாயம் பூசியதாக, 'பாரத் சேனா' அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும், ஈ.வெ.ரா, முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உட்பட, 2,000 சிலைகளுக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


தினமும் 1 கோடி


ஒவ்வொரு சிலைக்கும் சிறப்பு, எஸ்.ஐ., அல்லது ஒரு தலைமைக் காவலர், ஒரு காவலர், என, 12 மணி நேர, 'ஷிப்ட்' அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.அடுத்த ஷிப்ட் பணிக்கு வேறு இரு போலீசார் என, நான்கு போலீசார், தினமும் சிலை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.ஒரு காவலரின் ஒரு நாள் ஊதியம், குறைந்தபட்சம், 1,250 ரூபாய் எனில், நான்கு போலீசாருக்கு, 5,000 ரூபாய். அதாவது, ஒரு சிலையின் பாதுகாப்புக்கு, ஒரு நாளைக்கு அரசு செலவிடும் மக்கள் வரிப்பணம், 5,000 ரூபாய்.

தமிழகம் முழுதும், 2,000 சிலைகளுக்கான பாதுகாப்புச் நிதிச் செலவு, 1 கோடி ரூபாய்.கடந்த, 15 நாட்களுக்கும் மேலாக, பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அரசுக்கு நேரிட்ட வீண் செலவு, 15 கோடி ரூபாய். இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்பது, அரசுக்கே வெளிச்சம்.அதாவது, மக்களின் வரிப்பணம் எவ்வாறெல்லாம் விரயமாகிறது என்பதற்கு, இது ஒரு உதாரணம்.

தற்போது, கொரோனா தொற்றால், உலகமே அஞ்சி நடுங்கும் வேளையில், நோய்த் தொற்றை தடுப்பதில் போலீசாரின் பணி மகத்தானது. ஆனால், மக்களின் உயிர் பாதுகாப்புக்கான உன்னதமான பணியை விட்டு, அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில், இரவு, பகலாக ஈடுபட்டிருக்கின்றனர்.

ஒரு புறம், மக்களின் வரிப்பணம் விரயம். மறுபுறம், வைரஸ் பீதி நிலவும் கால கட்டத்திலும் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமே என்ற மன உளைச்சல் போலீசாருக்கு. இனியாவது தமிழக அரசு விழிப்படைந்து, மக்கள் வரிப்பணம் விரயமாகாமல் தவிர்ப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; அதற்கான யோசனைகள் இதோ:


என்ன செய்யலாம்?


சிலை, எந்த அமைப்பு அல்லது கட்சி சார்பில் நிறுவப்பட்டதோ, அந்த சிலைக்கு பாதுகாப்பு அளிப்பது அந்த அமைப்பினர் அல்லது கட்சியினரின் பொறுப்பு. அவர்களே, பிரச்னைக்குரிய சூழ்நிலைகளின் போது, தனியார் செக்யூரிட்டிகள் அல்லது தங்களது தொண்டர்களை நியமித்து, பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, இம்முறையைப் பின்பற்றித்தான், விநாயகர் சிலைகளுக்கான பாதுகாப்பை போலீசார் உறுதி செய்கின்றனர்.

இதே முறையை, தமிழகம் முழுதும் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள எல்லா சிலைகளுக்கும் பின்பற்றலாம் .சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு கட்டாயம் வேண்டும் என, அமைப்பினரோ அல்லது கட்சியினரோ கருதும் பட்சத்தில், எத்தனை போலீசார், பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுகின்றனரோ, அவர்களுக்கான ஊதியத்தை, அரசுக்கு அந்த அமைப்பினர், கட்சியினர் செலுத்த வேண்டும்.

தனியார் நிறுவன பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது, போலீஸ் துறையில், இந்த கட்டண முறை கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, சிலை பாதுகாப்பிற்கும், உரிய நபர்களிடம் கட்டணம் வசூலிப்பதன் வாயிலாக, மக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்க முடியும் .மேற்கண்ட இரு வழிமுறைகளில் ஒன்றை, சிலை வைத்தவர்கள் பின்பற்ற தயங்கினால், பொது இடங்களில், அவர்கள் நிறுவியுள்ள சிலைகளை, அவர்களே அகற்றி, தங்களது கட்சி ஆபீஸ், வீடு மற்றும் சொந்த நிலங்களில் வைத்துக் கொள்ள, தமிழக அரசு உத்தரவிடலாம்.

மேற்கண்ட இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்வதன் வாயிலாக, பொது இடங்களில் புதிதாக சிலைகளை வைப்பதை தடுக்கலாம்; சிலை வைத்தவர்களையே பாதுகாப்புக்கு பொறுப்பாளியாக்கும் போது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை மற்றும் நிதி விரயம் ஏற்படுவதை தவிர்க்கலாம்; இதைச் செய்யுமா தமிழக அரசு?


கட்டணம் எவ்வளவு?


போலீசுக்கு கட்டணம் செலுத்தி பாதுகாப்பு பெற, தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டண விபரம் - 12 மணி நேரத்துக்கு:

இன்ஸ்பெக்டர் - ரூ.2,274
சப் - இன்ஸ்பெக்டர் - ரூ.2,225
தலைமைக் காவலர் - ரூ.1,278
கிரேடு-1 காவலர் - ரூ.1,201

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
03-ஆக-202008:44:57 IST Report Abuse
Mani . V ...........இதன்மூலம், நாளொன்றுக்கு அரசுக்கு, 1 கோடி ரூபாய் வீதம், மக்களின் வரிப்பணம், 15 கோடி ரூபாய் வரை வீணடிக்கப்பட்டிருக்கிறது. தகுந்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்வதன் மூலம், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது............ கையாலாகாத அரசியல்வாதிகளால் என்ன கழட்டி ஸாரி செய்துவிட முடியும்? ஏன் தமிழகம் முழுவதும் பொது இடத்தில் இருக்கும் சிலைகள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டியதுதானே?
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
03-ஆக-202006:36:23 IST Report Abuse
Nathan திருப்பதி வேங்கடேச சாமிக்கும் உண்டியலுக்கும் பாது காப்பு ஏன் என்று பிதற்றியது. இப்போ தெரு சிலைகளுக்கெல்லாம் மக்கள் வரிப்பணத்தில் பாதுகாப்பு போட்டிருக்காங்க. இத்தூண்களுக்கெல்லாம் உயிருண்டா? இந்துக்கள் சிலை வணக்கத்தை பழித்துக் கொன்டே இதுங்களுக்கு மாலை, பிரியாணி படையல் வேரே . உவ்வெக், பகுத்தரிவே
Rate this:
Cancel
03-ஆக-202006:28:37 IST Report Abuse
சூரியா இந்த சிலைகள் அனைத்தையும் பொது இடங்களிலிருந்து முற்றிலும் நீக்குவது அதைவிட மிகச்சிறந்த யோசனை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X