பொது செய்தி

தமிழ்நாடு

அமைப்பு சாரா தொழிற்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் கொரோனா நிவாரண தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தலைவர் ஆதம்பாஷா தலைமையில் அளித்துள்ள மனு:அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கொரோனா நிவாரண தொகையை 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். பதிவு செய்து புதுப்பிக்காதவர்கள், புதிய பதிவுகள் என அனைவருக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும்.இணையதள பதிவில் பல்வேறு காரணங்களால் விண்ணப்பங்கள் தவிர்க்கப்படுகிறது, இந்த எதிர்மறை செயல்பாடுகளை நலவாரியங்கள் தவிர்க்க வேண்டும்.நல வாரியங்களில் ஓய்வூதியம், இயற்கை மரணம் போன்ற நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நிர்வாக தலைவர் பழனிவேல், செயலர் செல்வராஜி, துணைத் தலைவர் வள்ளி உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X