சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தைக்கு இறுதி சடங்கு 'தொற்று' மகன் பங்கேற்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 தந்தைக்கு இறுதி சடங்கு 'தொற்று' மகன் பங்கேற்பு

புதுக்கோட்டை; தந்தையின் இறுதிச்சடங்கில், கொரோனா பாதித்த மகன், பாதுகாப்பு கவச உடையுடன் பங்கேற்றார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த, 21 வயது வாலிபர், கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு. புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், அவரது தந்தை தமிழரசன், 54, நேற்று முன்தினம் மாரடைப்பால் இறந்தார். தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க, தன்னை அனுமதிக்க வேண்டும் என, ஒரே மகனான இளைஞர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, புதுக்கோட்டை கலெக்டர் உமா மகேஸ்வரி சிறப்பு அனுமதி வழங்கினார். நேற்று முன்தினம் மாலை, கவச உடை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், '108' அவசரகால ஆம்புலன்சில் வந்த இளைஞர், கவச உடை அணிந்தே, தந்தையின் இறுதிச் சடங்குகளை செய்தார்.

கொரோனா பாதித்த இளைஞருக்கு, அவரது உறவினர்கள், அருகில் சென்று ஆறுதல் சொல்ல முடியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, தள்ளி நின்று ஆறுதல் கூறி, அழுதனர். இறுதிச்சடங்கு முடிந்த பின், இளைஞர் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X