காணொலி மூலம் நடந்த தி.மு.க., செயற்குழு கூட்டம் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காணொலி மூலம் நடந்த தி.மு.க., செயற்குழு கூட்டம்

Added : ஆக 02, 2020
Share

காட்டுமன்னார்கோவில் : கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழுக் கூட்டம் காணொலி காட்சி மூலம், முட்டத்தில் நடந்தது.

மாவட்ட செயலார் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கட்சிப் பணிகள், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினமான வரும் 7ம் தேதி, கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவத் துறை, காவலர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கினார்.மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு, ஒன்றிய செயலாளர்கள், எம்.எல்.ஏ., எம்.பி., மற்றும் நகர செயலாளர்கள், சிறப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட 150 பேர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் கருணாநிதி நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்குவது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு மருத்துவ இட ஒதுக்கீட்டை குறைத்துள்ள மத்திய அரசையும், அதற்கு துணை போகும் மாநில அரசையும் கண்டித்தும், மாநில உரிமைகளையும், சமூக நீதிக்கும் எதிராகவும், இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளும் வகையில் கொண்டு வந்துள்ள மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X