பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டில் அனைத்துதுறையினருக்கும் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

மூங்கில்துறைப்பட்டு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்திற்கு ஆரம்ப சுகாதார நியை மருத்துவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில் சுகாதார துறை, வருவாய்துறை, காவல்துறை, மற்றும் ஊராட்சி துறையினர் கலந்துக்கொண்டனர்.இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றியும், அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், சுகாதாரதுறையினர் அனைவரும் பாதுகாப்புடன் கொரோனா தொற்று உள்ள இடங்களை கையாள வேண்டும்.

விழிப்புணர்வுடன் செயல்படுவதுடன் வெளியூரில் இருந்து வருபவர்களை கண்காணித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் பாலசேகர், ஊராட்சி செயலாளர்கள் அலெக்ஸ், ராமச்சந்திரன், செவிலியர்கள், கிராம செவிலியர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X