கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கட்டட தொழிலாளர் பதிவு: அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

மதுரை; கட்டட தொழிலாளர்களுக்கு, ஊரடங்கு நிவாரணம் கோரிய வழக்கில், பதிவை புதுப்பிக்காத மற்றும் பதிவு செய்யாதவர்கள், 'ஆன்லைன்' அல்லது நேரடியாக பதிவு செய்ய வழிமுறைகள் குறித்து, அரசு பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தமிழக கட்டடத் தொழிலாளர் மத்திய சங்க தலைவர், பொன் குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில், கட்டட தொழிலாளர்கள் நல வாரியத்தில், 33 லட்சம் பேர் பதிவு செய்தனர். இவர்களில் பெரும்பான்மையோர் போதிய கல்வியறிவு, நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாதவர்கள்; அடிக்கடி, இடம்பெயரக் கூடியவர்கள்.

இதனால், பலர் பதிவை புதுப்பிக்க இயலவில்லை. ஊரடங்கு காலத்தில், வருவாயின்றி சிரமப்படுகின்றனர்.பதிவை புதுப்பித்தவர்களில், 12 லட்சம் பேருக்கு, ஊரடங்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இது, போதுமானதல்ல. டில்லி, பஞ்சாப், உ.பி.,யில் கூடுதல் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கட்டட தொழிலாளர்கள் உட்பட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களிலும், பதிவை புதுப்பிக்காத தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். பதிவு செய்த கட்டட தொழிலாளர்களுக்கு, கூடுதலாக, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.

நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு உத்தரவு:பதிவை புதுப்பிக்காத மற்றும் பதிவு செய்யாத தொழிலாளர்கள், 'ஆன்லைன்' அல்லது நேரடியாக பதிவு செய்யலாமா, ஆன்லைனில் பதிய ஆங்கிலம் உட்பட எந்தெந்த மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன.எப்படி பதிவு செய்வது, யாரை தொடர்பு கொள்வது, இ-மெயில், தொடர்பு எண் விபரங்களை கட்டுமான தொழிலாளர் நல வாரிய செயலர், ஆக., 4ல் பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X