பொது செய்தி

தமிழ்நாடு

அம்பலவாணன்பேட்டை ஊராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிப்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கடலுார் : குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அம்பலவாணன்பேட்டை ஊராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் இரண்டு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து, அங்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக குறிஞ்சிப்பாடி ஒன்றியம், அம்பலவாணன்பேட்டை ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர் ராமச்சந்திரன் முன்னிலையில் துாய்மை பணியாளர்கள் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். நான்கு நாட்களுக்கு கிருமி நாசினி, பிளிச்சிங் பவுடர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பொது மக்களுக்கு கபசுர குடிநீர், முகக் கவசம் வழங்கப்பட்டு வருவதாக ஊராட்சி மன்றத் தலைவர் ராமச்சந்திரன் கூறினார். ஊராட்சி செயலர் பாண்டியன் உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X