பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு மானியம் வழங்கல்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகிறது.

இது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் வாமலை செய்திகுறிப்பு;கள்ளக்குறிச்சி பகுதியில் விவசாயம் சார்ந்த காய்கறிகள், பழவகை மரங்கள், பூச்செடிகள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக மரவள்ளி, மஞ்சள், வெங்காயம் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இவ்வகை பயிர் சாகுபடிக்கு தோட்டக்கலைத்துறை பல்வேறு திட்டங்கள் மூலம் மானியங்கள் வழங்குகிறது.தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் நடவு பொருட்கள், பழசெடிகள், வீரிய ரக காய்கறி விதை நாற்றுகள் மற்றும் பசுமைக்குடில், நிழல்வலைகுடில் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை உள் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள 50 சதவீத மானியத்தில் வெங்காய சேமிப்பு கிடங்கு, காய்கறி சிப்பம் கட்டும் அறை கட்டவும், இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் டிராக்டர், பவர்டில்லர் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகிக்கப்படுகிறது. பாரம்பரிய காய்கறி மற்றும் காய்கறி தோட்டம், தோட்டக்கலை உபகரணங்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

தேசிய நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு 75 முதல் 100 சதவீதம் வரை மானியம் வழங்கப் படுகிறது. குறிப்பாக 5 ஏக்கர் வரை உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.அதேபோல், துணை நீர் பாசன மேலாண்மை திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம் மானியம், மின் மோட்டார் அல்லது டீசல் இன்ஜின் வாங்க ரூ.15 ஆயிரம் மானியம், பாசன நீர் எடுத்துச் செல்வதற்கான பிவிசி பைப்புகள் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம், நீர் சேகரிப்பு அமைப்புகள் அமைத்துக்கொள்ள ரூ.40 ஆயிரம் அளவில் மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டங்கள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு கள்ளக்குறிச்சி தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X