அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாகை எம்.பி.,க்கு கொரோனா

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
நாகப்பட்டினம்; நாகை லோக்சபா தொகுதி, எம்.பி.,க்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திருவாரூர் மாவட்டம், சித்தமல்லியைச் சேர்ந்தவர் செல்வராஜ், 63. நாகை லோக்சபா தொகுதியில், இந்திய கம்யூ., சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இவருக்கு, சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று முன்தினம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி
 நாகை எம்.பி.,க்கு கொரோனா

நாகப்பட்டினம்; நாகை லோக்சபா தொகுதி, எம்.பி.,க்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், சித்தமல்லியைச் சேர்ந்தவர் செல்வராஜ், 63. நாகை லோக்சபா தொகுதியில், இந்திய கம்யூ., சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். இவருக்கு, சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நேற்று முன்தினம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை செய்தார்.

நேற்று, அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.நாகையில் கடந்த, 30ம் தேதி நடந்த, புதிய மயிலாடுதுறை மாவட்டம் கருத்துக் கேட்பு கூட்டத்தில், கைத்தறி துறை அமைச்சர் மணியன், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுடன், செல்வராஜும் பங்கேற்றார். இதனால், அவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
03-ஆக-202010:50:46 IST Report Abuse
ஆரூர் ரங் கம்யூனிஸ்ட் என்பதால் சிகிச்சைக்கு ஊஹான் அனுப்பிவிடலாம் . அவர்களுக்குத்தான் விசுவாசம்
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
03-ஆக-202002:06:10 IST Report Abuse
Baskar ivanai paartthaal karuppar kuttathil oruvan pol therikirathu. intha aalukku eppadi korono varum. ivarkal thaan makkalukku thondum seiyavillai.ondrinivom vaa nigazhchiyilum kalakka maattaarkale. pogattum nallavithamaaga kunamadainthu veedu thirumpavum.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X