சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியதண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சின்னசேலம் : சின்னசேலம் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

சின்னசேலம் அடுத்த அம்மையகரம் - மூங்கில்பாடி கிராம மக்கள் பல ஆண்டுகளாக ரயில்வே சுரங்கப்பாதை வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதனால், கடந்த ஓராண்டிற்கு முன் ரயில்வே துறை சார்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணி முடியும் பட்சத்தில் சமத்துவபுரம், மூங்கில்பாடி, பாண்டியன்குப்பம், திம்மாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.இந்நிலையில், தற்போது சுரங்கப்பாதை பணி முடிவடைந்து, மேற்கூறை அமைக்கும் பணி நடைபெறும் நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் இவ்வழியாக செல்வோர் மிகுந்த சிரமப்படுகின்றனர். மேலும் சுரங்கப்பாதை என்பதால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் பல நாட்களாக தேங்கி நிற்கிறது. எனவே அதிகாரிகள் பருவமழை தொடங்கும் முன் மேற்கூறை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X