அம்மச்சார் அம்மனுக்கு பால்குட உற்சவம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அம்மச்சார் அம்மனுக்கு பால்குட உற்சவம்

Added : ஆக 02, 2020
Share

திருக்கோவிலூர் : மணலூர்பேட்டை அம்மச்சார் அம்மன் கோவிலில் 14ம் ஆண்டு பால்குட விழா நடந்தது.

மணலூர்பேட்டை அம்மச்சார் அம்மன் கோவிலில் 14ம் ஆண்டு பால்குட விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு பக்தர்கள் எடுத்துவந்த பால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி, வளைகாப்பு, தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதிக பக்தர்கள் இன்றி தனிமனித இடைவெளியுடன் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X