சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் டிரைவர் குத்திக்கொலை

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 கார் டிரைவர் குத்திக்கொலை

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில், கார் டிரைவர் குத்தி கொலை செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி, பழையப்பேட்டை மேல் தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ், 27; கார் டிரைவர்; இவருக்கும், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள ஒருவருக்கும், மொபைல் போனில் பேசியதில், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் சமாதானம் பேச, நண்பருடன், பவுன்ராஜ், நேற்று மதியம், 1:00 மணிக்கு, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு சென்றார்.

அப்போது, அங்கு வந்த இருவர், பவுன்ராஜை கத்தியால் குத்தியுள்ளனர்.தப்பியோடிய அவர், துறிஞ்சிப்பட்டியில் கீழே விழுந்து இறந்தார்.கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பவுன்ராஜின் தாய், தங்கை மற்றும் உறவினர்கள், மருத்துவமனை முன் திரண்டனர்.கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, மறியலில் ஈடுபட முயன்றனர்.குற்றவாளிகளை கைது செய்வதாக போலீசார் உறுதி கூறவே, கலைந்து சென்றனர். கொலையாளிகளை, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X