சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்நாளுக்கு நாள் குறையும் தொற்று

Added : ஆக 02, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிக குறைந்த அளவே இருந்த நிலையில், வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.கள்ளக்குறிச்சி நகர பகுதியில் வசிக்கும் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் காய்கறி மார்க்கெட் உட்பட பல்வேறு தெருக்கள் மூடப்பட்டன. கள்ளக்குறிச்சி 21 நகராட்சி வார்டுகளிலும் வசிக்கும் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருந்தது.

இது தவிர ஜூலை மாத இறுதியில் தினமும் 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானதால் மக்கள் கடும் அச்சமடைந்தனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களாக குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது கள்ளக்குறிச்சியில் 2,3,4,6,7,9,13,18,19,20 ஆகிய 10 நகராட்சி வார்டுகளில் ஒருவருக்கு கூட தொற்று இல்லை. மற்ற வார்டுகளில் 31 பேருக்கு மட்டுமே தொற்று உள்ளது. அதேபோல் புதிதாக தொற்று உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X