பொது செய்தி

தமிழ்நாடு

16 கிளைகளுடன் அதிசய பனை மரம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 16 கிளைகளுடன் அதிசய பனை மரம்

பெரம்பலுார்; அரியலுார் அருகே, 16 கிளைகளுடன் உள்ள பனை மரத்தை, இப்பகுதி மக்கள் அதிசயத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

அரியலுார், கீழக்குளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்,55. விவசாயியான இவருக்கு சொந்தமான வயலில், கடலை, முந்திரி ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளார். இவரது வயலின் வரப்புகளில், இருபதுக்கும் மேற்பட்ட பனை மரங்களை வளர்த்து வருகிறார். இதில், ஒரு பனை மரம் கீழிலிருந்து மேல் பகுதி வரை செடி, கொடிகள் சுற்றி புதர் மண்டி இருந்தது. அதை வெட்டி நேற்று சுத்தம் செய்தார்.

அப்போது, 35 அடி உயரம் உள்ள இந்த பனை மரத்தில் மொத்தம், 16 கிளைகள் இருப்பது தெரியவந்தது. அதிசயமாக பார்த்த இவர், கிராம மக்களிடம் இதுகுறித்து தெரிவித்தார். இத்தகவல் காட்டுத் தீயாய் இப்பகுதியில் பரவியது. இதைத் தொடர்ந்து, இப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த அதிசய பனை மரத்தை பார்த்து ரசித்து செல்கின்றனர். இதேபோல், பண்ருட்டி அருகே, 7 கிளைகளுடன் பனை மரம் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X