சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனைக்கு வர மறுக்கும் மக்கள்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார் : கொரோனா பரிசோதனைக்கு வர மறுத்து பொதுமக்கள் அடம் பிடிப்பதால், பரிசோதனை இலக்கை எட்ட முடியாமல் சுகாதாரத் துறையினர் தவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று அங்கொன்றும், இங்கொன்றுமாக தென்பட்ட பரவல், சமூகத்தில் அனைத்து தரப்பினருக்கும் பரவத் துவங்கியது. இதனால், ஏற்பட்ட உடல் ரீதியான பாதிப்புகளையும், சிகிச்சை என்ற பெயரில் நோயாளிகள் அழைத்துச் சென்று அலைகழிக்கப்படுவது. அவர்களுக்கான சிகிச்சை முறை போன்ற வற்றை பார்த்த கிராம மக்கள் நோயின் தீவிர நிலையை அறிந்து இனி வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பாரம்பரிய வைத்திய முறையை பின்பற்ற வேண்டிய மனநிலைக்கு வந்து விட்டனர்.

நோயின் தீவிரம் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் காட்டியது போல் அவ்வளவு பெரிய கொடிய வியாதி இல்லை என்பதை நேரடியாக உணர்ந்துள்ளனர்.இதன் காரணமாக சில நாட்களாக கிராம பகுதிகளில் மட்டுமல்லாது, நகரங்களில் கூட நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அதனை வெளியே கூறாமல், மாத்திரை, மருந் துடன் கஷாயம், கபசுர குடிநீர் என பாரம்பரிய வீட்டு வைத்தியத்திற்கு மாறத் துவங்கி விட்டனர். உணவே மருந்து என்ற நிலையை பல இல்லங்களில் தற்போது கடைபிடிக்கத் துவங்கி விட்டனர்.தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள இச்சூழலில் டெங்கு போன்ற காய்ச்சல் வழக்கமாக ஆண்டு தோறும் இக்கால கட்டத்தில் தமிழ கத்தை ஆட்டிப் படைக்கும்.

ஆனால் இந்த ஆண்டு அது போன்ற நோயின் பெயரை கேட்க முடியவில்லை. இதற்கு காரணம் கிருமிநாசினி தெளிப்பு, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொள்ளும் பாரம்பரிய மருந்தை மக்களே உணவாக்கிக் கொண்டு இருப்பதுதான். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து டெங்கு உள்ளிட்ட நோய் தொற்று தடுக்கப்பட்டிருப்பதாக விபர மறிந்த மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட வழக்கமான மருத்துவ சிகிச்சைக்கு வரும் கிராமப்புற நோயாளிகள் கட்டாயப்படுத்தி பி.சி.ஆர்., பரிசோதனைக்கு உட்படுத்தும் நிலைக்கு சுகாதாரத்துறையினர் தள்ளப்பட்டுள்ளனர்.

நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களின் உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறையினர் எடுக்கும் நடவடிக்கை தோல்வியிலேயே முடிகிறது. இதன் காரணமாக கொரோனா பரிசோதனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் கணிசமாக குறைந்துவிட்டது.உதாரணத்திற்கு திருக்கோவிலுார், முகையூர் வட்டாரங்களில் சுகாதாரத் துறையினர் கண்டிப்பாக ஒரு நாளைக்கு 100 பேருக்காவது பரிசோதனை எடுக்க வேண்டும் என்ற அரசின் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கிராமங்களில் நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் காய்ச்சல் இருந்தால்கூட சிகிச்சைக்கு வராத நிலையில் அரசின் அழுத்தத்தின் காரணமாக பி.சி.ஆர்., பரிசோதனைக்கு ஆள் கிடைக்காமல் சுகாதாரத் துறையினர் அல்லல்படும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X