சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை பறிக்க முயற்சி: வழக்கு பதிவு செய்ய போலீசார் அலட்சியம்

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருநெல்வேலி; நகை பறிக்க முயன்ற சம்பவத்தில், வழக்குப் பதிவு செய்வதில், போலீசார் அலட்சியம் காட்டினர்.திருநெல்வேலி பழையப்பேட்டை காந்தி நகரில், தன் வீட்டு முன், செல்வரத்தினம், 57, என்ற பெண், நேற்று காலை கோலமிட்டார். முகமூடி அணிந்து வந்த மூன்று பேர், அவரது கழுத்தில் கிடந்த, 9 சவரன் செயினை பறித்தனர்.செயினை பிடித்துக் கொண்டதால், அந்த கும்பல் தப்பியது. விரட்டி சென்ற
 நகை பறிக்க முயற்சி: வழக்கு பதிவு செய்ய போலீசார் அலட்சியம்

திருநெல்வேலி; நகை பறிக்க முயன்ற சம்பவத்தில், வழக்குப் பதிவு செய்வதில், போலீசார் அலட்சியம் காட்டினர்.
திருநெல்வேலி பழையப்பேட்டை காந்தி நகரில், தன் வீட்டு முன், செல்வரத்தினம், 57, என்ற பெண், நேற்று காலை கோலமிட்டார். முகமூடி அணிந்து வந்த மூன்று பேர், அவரது கழுத்தில் கிடந்த, 9 சவரன் செயினை பறித்தனர்.செயினை பிடித்துக் கொண்டதால், அந்த கும்பல் தப்பியது. விரட்டி சென்ற செல்வரத்தினத்தின் மகன் நடராஜனை, அரிவாளால் வெட்ட முயன்ற அந்த கும்பல் தப்பியது.திருநெல்வேலி போலீசில் புகார் அளித்தபோது, 'நகை கிடைத்து விட்டதே...' எனக் கூறி, புகாரை பெறாமல், போலீசார் அலட்சியப்படுத்தினர்.

செயின் பறிக்க முயன்ற சம்பவம் பதிவான, 'சிசிடிவி' காட்சிகள் வலைதளங்களில் பரவின.இதுகுறித்து, அதிகாரிகளுக்கு புகார் சென்றதால், மாலை, 4:00 மணிக்கு போலீசார் விசாரித்து, வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,இந்தியா
09-ஆக-202010:54:42 IST Report Abuse
Hari நாம மறுபடியும் சந்தேக கேசு என் கொண்டுவரக்கூடாது,அதாவது 1982 எம் ஜி ஆர் சந்தேகம் என்ற பெயரில் அப்பாவிகள் போலீசால் பிடித்து செல்லப்படுகிறார்கள் என சொல்லி தனது கட்சிக்காரர்களின் வற்புறுத்துதலால் அந்த குற்ற சாரத்தை நீக்கினார் ,அதனால திருட்டு வழிப்பறி ,கொள்ளை கொலை வீடுபுகுந்து திருடுதல் ,கொள்ளை அடித்தல் பெருகிவிட்ட்து, பொதுமக்களாகிய நாம போலீசுக்கு தன கடமையை தைரியமாக செய்ய இந்த சட்டத்திருத்தம் செய்து அமல்படுத்த ஒத்துழைப்பு கொடுக்கணும் ,இதனால் திருட்டுப்புத்தி உள்ளவர்கள் அணைத்து இடங்களுக்கும் நகர்வதை கட்டுப்படுத்தி குற்றங்களை தடுக்க முடியும் .மக்களுக்கு எது நல்லதோ அதைத்தான் அரசு முதலில் செய்யணும்.மேலும் போலீசுக்கு அணைத்து நேரங்களிலும் துப்பாக்கி கைல இருக்க சட்டத்திருத்தம் வேணும்.போலீஸ் கைகாட்டும்போது நிறுத்தவில்லை என்றால் சுட அதிகாரம் வேணும்.ஓன்று இரண்டு தவறுகள் நடக்கலாம் ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஒழுக்கம் மேம்படும் அதனால மக்கள் நேர்மையாக வாழும் சூழல் உருவாகும் .இப்போதைய நிலைமை உலக நாடுகளில் உள்ள குற்றவாளிகள் அனைவரும் விசா எடுத்துக்கொண்டு இந்தியாவில் கொள்ளை கொலை செய்யும் தொழிலை செய்கிறார்கள் இது நல்லது அல்ல.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
09-ஆக-202005:10:17 IST Report Abuse
NicoleThomson இது போன்ற காவலர்கள் நிஜமாகவே பணிக்கு தேவையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X