தொழிலாளர்கள் மோதல்: 4 பேர் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்கள் மோதல்: 4 பேர் காயம்

Added : ஆக 02, 2020
Share

ராமநாதபுரம்; ராமநாதபுரம் 'டி' பிளாக் பகுதியில் புதியதாக அரசு மருத்துவக்கல்லுாரி கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர். நேற்று இரவு சிதம்பரத்தை சேர்ந்தவர்களுக்கும், சாயல்குடி கோட்டையேந்தல் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் இரும்புக்கம்பிகளால் தாக்கிக்கொண்டனர். இதில் சிதம்பரத்தை சேர்ந்த ரஜினி, கோட்டையேந்தலை சேர்ந்த கதிர், மாதவன், ராமகிருஷ்ணன் பலத்த காயமடைந்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X