பொது செய்தி

தமிழ்நாடு

வாரிய வேலைக்கு காத்திருப்போர் ஊரடங்கு நீட்டிப்பால் அதிருப்தி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; ஊரடங்கு நீட்டிப்பால், மின் வாரியத்தில், உதவி பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள, லட்சக்கணக்கான பட்டதாரிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

தமிழக மின் வாரியத்தில், உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவி களில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன.இதனால், 600 உதவி பொறியாளர்; 1,300 கணக்கீட்டாளர்; 500 இளநிலை உதவியாளர் கணக்கு ஆகிய பதவிகளுக்கு, ஆட்களை தேர்வு செய்ய, பிப்ரவரி முதல், மார்ச் இறுதி வரை, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதில், உதவி பொறியாளருக்கு, 1.03 லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரி களும்; கணக்கீட்டாளர் பதவிக்கு, 79 ஆயிரம் பட்டதாரிகளும்; உதவியாளர் கணக்கு பதவிக்கு, 32 ஆயிரம் பட்டதாரிகளும் விண்ணப்பித்துஉள்ளனர். அவர்களுக்கு, மே மாதத்தில் கணினி வாயிலாக எழுத்து தேர்வு நடத்தி, அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு, இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி ஆணை வழங்க, மின் வாரியம் திட்டமிட்டது.ஆனால், மார்ச் இறுதி யில், கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், திட்டமிட்டபடி தேர்வை நடத்த முடியவில்லை.

பின், ஊரடங்கை தளர்த்தியதும், தேர்வு நடத்த முடிவானது. இம்மாதம் ஊரடங்கு தளர்த்தப்படும், அதைத் தொடர்ந்து தேர்வை நடத்தலாம் என, மின் வாரிய அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.இந்நிலையில், வரும், 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், தேர்வு நடத்துவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள லட்சக்கணக்கான பட்டதாரிகள், அதிருப்தி அடைந்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X