பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி ஊழியர்கள் வருகை தலைமை செயலருக்கு கடிதம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; வங்கிகளில், 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே, பணிக்கு வர அனுமதிக்கக் கோரி, தமிழக தலைமை செயலருக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது

.இது குறித்து, தலைமை செயலர் சண்முகத்திற்கு, சங்கத்தின் பொதுச் செயலர், எஸ்.கணேசன் அனுப்பியுள்ள கடிதம்:மத்திய உள்துறை அமைச்சகம், பொது ஊரடங்கை, வரும், 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.இதேபோல, தமிழகத்திலும், 31ம் தேதி வரை, ஊரடங்கை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பொதுப் போக்குவரத்திற்கும் தடை நீடிக்கிறது. அலுவலகங்களில், 75 சதவீத ஊழியர்கள், பணிக்கு வரவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஆனால், வங்கிகள், 100 சதவீத ஊழியர்களுடன், வழக்கமான சேவையில் ஈடுபடும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இது, தமிழக அரசின் உத்தரவை மீறுவதாக உள்ளது. தற்போது, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் கூடுதலான நபர்கள் வருகின்றனர்.

இதன் காரணமாக, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், அதிகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, 100 சதவீத ஊழியர்களுடன், வழக்கம் போல செயல்பட்டால், தொற்று அதிகளவில் பரவ வாய்ப்பு உள்ளது.எனவே, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்க மாநிலங்களை போல, வங்கிகளில், 50 சதவீத ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும்.

ஊரடங்கின் போது, அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறையும், பணி நேரத்தை, காலை, 11:00 முதல், 2:00 மணி வரையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X