பொது செய்தி

தமிழ்நாடு

'இ- - மெயில்' போராட்டம் பஸ் ஓய்வூதியர் அறிவிப்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றோர், 'இ- - மெயில்' அனுப்பும் போராட்டம் நடத்த உள்ளனர்.

இது குறித்து, அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் செயலர், கர்சன் கூறியதாவது:போக்குவரத்து துறையின் முன்னாள் செயலர், 2019 செப்டம்பரில் வெளியிட்ட எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 56 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும். 2019 ஏப்ரல் முதல், பணிக் காலத்தில் இறந்தவர்களுக்கு, குடும்ப நல நிதி, 3 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். கடந்தாண்டு ஏப்ரலுக்குப் பின், ஓய்வு பெற்றோருக்கான பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, போக்குவரத்து துறை செயலருக்கு இன்றும், அந்தந்த போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுக்கு, நாளை மறுநாளும் இ- - மெயில் அனுப்ப முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X