பொது செய்தி

தமிழ்நாடு

மானியத்தில் நாற்றுகள்; விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 மானியத்தில் நாற்றுகள்; விவசாயிகளுக்கு அழைப்பு

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதி விவசாயிகளுக்கு, தோட்டக்கலை துறை மூலம் மானியத்தில் நாற்றுகள் வழங்கப்படுகின்றன.காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது குறித்து மடத்துக்குளம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கை:மடத்துக்குளம் பகுதியில், தக்காளி, கத்தரி, மிளகாய் பயிர்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வகை காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், தரமான நாற்றுகளை தமிழ்நாடு அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம், உற்பத்தி செய்து வழங்கும் மானியத்திட்டம் நடைமுறையில் உள்ளது.தக்காளி, 25 ஹெக்டேர், கத்தரி, 2 ஹெக்டேர், மிளகாய், 5 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யும் அளவு விவசாயிகளுக்கு, நாற்றுகள் வழங்கப்பட உள்ளது. மாற்றுப்பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, முருங்கை, 10 ஹெக்டேர், பப்பாளி, 4 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யும் அளவு நாற்றுகள் மானியத்தில் வழங்கப்படும்.நாற்றுகளை பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலி மூலமாகவும், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மானியம் பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல், வங்கி சேமிப்புக்கணக்கு புத்தகம், பாஸ் போர்ட் சைஸ் போட்டோ 2, ஆகிய ஆவணங்கள் கொண்டு வர வேண்டும்.ஆதிதிராவிட விவசாயிகள், சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ள விவசாயிகள் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைக்க முன் வரும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.கூடுதல் தகவல் பெற விரும்பும் விவசாயிகள், தோட்டக்கலை துறை அலுவலர்கள் தாமோதரன், 96598 38787, ராஜசேகர் 86705 56865 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X