பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் சனிப்பிரதோஷ பூஜை

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 கோவில்களில் சனிப்பிரதோஷ பூஜை

பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை சுற்றுப்பகுதி கோவில்களில் சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.உடுமலை, ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் சனிக்கிழமை பிரதோஷத்தையொட்டி, சுவாமிகளுக்கு, பால், தயிர், பன்னீர் போன்ற திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. ரத்னலிங்கேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு, தரிசனம் செய்தனர். உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் நடந்த சனிப்பிரதோஷத்தையொட்டி, காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.பொள்ளாச்சி பொள்ளாச்சி குமரன் நகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் கோவிலில், ஆடி சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம், ஆராதனை பூஜைகள் நடைபெற்றன.மாகாளியம்மன் கோவிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு ருத்ரலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவில், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில், சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் காசிவிஸ்வநாதருக்கு, பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஸ்ரீமல்லேஸ்வரர் மலைக்குன்று கோவிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், திருநீறு போன்றவைகளால் அபிேஷக பூஜை நடந்தது. பின், சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. - நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X