பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமான திட்டங்களை முடிக்க ரூ.

Added : ஆக 02, 2020
Share
Advertisement

'ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், நாடு முழுதும் நிலுவையில் உள்ள, குடியிருப்புகள் கட்டுமான திட்டப் பணிகளை முடிக்க, 1.50 லட்சம் கோடி ரூபாய் தேவை' என, தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில், மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில், உலகம் முழுதும் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் பாதித்த ரியல் எஸ்டேட் வர்த்தகம், இந்தாண்டு, கொரோனா தொற்று தடுப்புக்கான ஊரடங்கால் முழுமையாக முடங்கியுள்ளது.அறிக்கைஇந்த முடக்க நிலையில் உள்ள, ரியல் எஸ்டேட் துறையை மீட்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில், கட்டுமான துறையினரின் தேவை குறித்த முழுமையான ஆய்வை, தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் நடத்தியது. இதில் தெரியவந்த கருத்துகள் அடிப்படையில், இக்கவுன்சில், மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. அதுபற்றி, கவுன்சில் நிர்வாகிகள் கூறியதாவது:உலக பொருளாதார மந்த நிலையால், 2019ல், ரியல் எஸ்டேட் துறையில் நிலுவை திட்டங்களை முடிக்க, சிறப்பு கடன் உதவியாக, 25 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது.இந்த நிதி, பெரிதாக முதலீடு தேவைப்படும் திட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

தற்போது, ஊரடங்கால் முடங்கியுள்ள இத்துறையை மேம்படுத்த, 1.50 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது.சிக்கல்இந்த அளவுக்கு புதிய முதலீடுகளை திரட்டுவது, தற்போதைய சூழலில் பெரிய சிக்கலாக உள்ளது.எனவே, மத்திய அரசு, ரியல் எஸ்டேட் துறைக்கு, 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு, புதிய கடன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.விரைவில், நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர் - -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X