பொது செய்தி

தமிழ்நாடு

தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

உடுமலை:தென்னந்தோப்புகளில், அயல் மகரந்த சேர்க்கையை அதிகரிக்க தேனீ வளர்ப்பில், உடுமலை விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உடுமலை பகுதியில், பல ஆயிரம் ஏக்கரில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னந்தோப்புகளில், பல்வேறு காரணங்களால், தேங்காய் உற்பத்தி குறைகிறது. குறிப்பாக, களைகளை கட்டுப்படுத்த, அதிக மருந்து தெளிப்பதால், நன்மை செய்யும் பூச்சிகளும், பாதிக்கப்படுகின்றன. தேனீக்களை ஈர்க்கும், சிறு செடிகளும், அதிக பூச்சிக்கொல்லி தெளிப்பால், கருகி விடுகின்றன.இதனால், மகரந்த சேர்க்கை குறைந்து, தென்னை மரங்களில், காய்ப்புத்திறன் பாதிக்கப்படுகிறது. அயல் மகரந்த சேர்க்கையை, அதிகரிக்க, தேனீ வளர்ப்பு உதவும் என தோட்டக்கலைத்துறையினர் பரிந்துரைக்கின்றனர்.இதற்காக, தென்னந்தோப்புகளில், குறிப்பிட்ட இடைவெளிகளில், தேனீ பெட்டிகள் வைத்து, பராமரிக்கின்றனர். எனவே, அயல் மகரந்த சேர்க்கை அதிகரிப்பதுடன், தேன் விற்பனையிலும், கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில், தேனீ பெட்டிகள் வாங்குவதற்கான மானிய திட்டத்தை, மீண்டும் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X