அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தமிழகத்தின் கல்வி ஒளியை அணைய விடமாட்டோம்'

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (121)
Share
Advertisement
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை: ''மத்திய அரசின், புதிய கல்வி கொள்கையை, தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்,'' என, கருத்து மேடை கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

புதிய கல்வி கொள்கை குறித்த, கருத்து மேடை கூட்டம், ஸ்டாலின் தலைமையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று நடந்தது. தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி வரவேற்று பேசினார்.

முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, பேராசிரியர் கருணானந்தம், விஞ்ஞானி ராமானுஜம், கல்வியாளர் கஜேந்திரபாபு, டாக்டர் எழிலன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு உட்பட, 20க்கும் மேற்பட்டோர் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

அதில், ஸ்டாலின் பேசியதாவது: உயர் கல்விக்கு மாணவர்கள் செல்வது தடுக்கப்படும். தாய்மொழி புறக்கணிக்கப்படும். அனைவருக்கும் கல்வி கிடைக்காது. இந்தக் கல்வி கொள்கை அமலானால், 10 ஆண்டுகளில், கல்வி என்பது, சிலருக்கு மட்டும் சொந்தமானதாகி விடும். புதிய கல்விக் கொள்கையை, தமிழக அரசு மறுக்க வேண்டும்; நிராகரிக்க வேண்டும். எதிர்க்காமல் மவுனம் சாதிக்கக் கூடாது.

அரசியல் ரீதியாக, மத்திய அரசுக்கு பயந்து, தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு துரோகம் செய்து விடாதீர்கள். தமிழக மாணவர்கள், உலகத்தின் அனைத்து நாடுகளிலும், அறிவு சக்தியாக திகழ்கின்றனர். அவர்களின் கல்வி ஒளியை அணைய விடமாட்டோம். அதை அணைக்க நினைப்பவர்களிடம் இருந்து, தமிழக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, தமிழகத்தின் கல்வி ஒளியைக் காப்போம். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.


தீரன் சின்னமலைக்கு ஸ்டாலின் மரியாதை


தீரன் சின்னமலை நினைவு தினத்தை ஒட்டி, சென்னை, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு, மாலை அணிவித்தும், அவரது உருவப் படத்திற்கு மலர் துாவியும், ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது: நாட்டுப்பற்றுக்கும், வீரத்திற்கும், தமிழக இளைஞர்களுக்கு அடையாளமாக விளங்கும், தீரன் சின்னமலை, நாட்டிற்கு ஆற்றிய பணிகள் பெருமைக்குரியது.ஏழைகளுக்காக, வரிப்பணத்தை வழிமறித்துக் கைப்பற்றியபோது, 'சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில், ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்' என, துணிச்சலாகச் சொன்னவர். அவருக்கு பெருமை சேர்க்க, தி.மு.க., ஆட்சியில் தான் சிலை வைக்கப்பட்டது.

கருணாநிதி, முதல்வராக இருந்தபோது, நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற வேண்டும் என்ற, உயரிய நோக்கத்தோடு, கொங்கு வேளாளர் சமுதாயத்தை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர், கருணாநிதி. மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற, தீரன் சின்னமலையின் கனவை நனவாக்க, தி.மு.க., என்றைக்கும் பாடுபடும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (121)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
05-ஆக-202012:03:44 IST Report Abuse
Indian  Ravichandran காமடி பீஸ்,
Rate this:
Cancel
Subramanian Marappan - erode,இந்தியா
04-ஆக-202008:02:38 IST Report Abuse
Subramanian Marappan புதுச்சேரியில் வாழ்பவர்களும் தமிழ் பேச கூடியவர்கள் தான் அங்கே Navodaya pallikal உள்ளன. அங்கே உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை கெடுத்தது திராவிட பதர்கள்தான். எனவே தமிழ் நாடு வளம்பெற தேசிய கட்சிக்கு ஆதரவு தர வேண்டும். .
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
04-ஆக-202000:26:42 IST Report Abuse
Siva கந்தனுக்கு அரோகரா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X