விபத்து அபாயம்

Added : ஆக 02, 2020
Share
Advertisement

உடுமலையிலிருந்து கண்ணம்மநாயக்கனுார் செல்லும் ரோட்டில் வேகத்தடை அடையாளம் இல்லாமல் இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது.வி.ராகவன்,உடுமலை.தெருநாய்களால் அச்சம்உடுமலை, காந்திநகர் இரண்டாவது வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துக்குள்ளாகின்றனர்.ஆர்.பாஸ்கர்,உடுமலை.விதிமீறும் வாகனங்கள்உடுமலை, அனுசம் ரோட்டில் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வதால், அவ்வழியாக செல்வோர் அச்சப்படுகின்றனர்.எம்.சந்தியா,உடுமலை.சுகாதாரம் பாதிப்புபொள்ளாச்சி தேர்நிலையம் அருகே, சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில், குப்பை குவிக்கப்படுவதால், கடும் துர்நாற்றம் வீசி சுகாதாரம் பாதிக்கிறது.கே.அருணாச்சலம், பொள்ளாச்சி.போக்குவரத்து பாதிப்புபொள்ளாச்சி - கோவை ரோட்டிலுள்ள கடைகளுக்கு வருவோர், வாகனங்களை ரோட்டிலேயே ஆக்கிரமித்து நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எம்.முருகன்,பொள்ளாச்சி.'குடி'மகன்களால் தொல்லைஆனைமலை அய்யாமடை பிரிவு, இந்திராநகர் பகுதிகளிலுள்ள 'டாஸ்மாக்' கடைகளில், சரக்கு வாங்கும் 'குடி'மகன்கள், ரோட்டிலேயே அமர்ந்து மது குடித்துவிட்டு படுத்து உருளுவதால், விபத்துக்கள் ஏற்படுகிறது.ஆர்.பிரதீப், ஆனைமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X