அரசியல் செய்தி

தமிழ்நாடு

தீரன் சின்னமலை நினைவு தினம் முதல்வர், துணை முதல்வர் மரியாதை

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 தீரன் சின்னமலை நினைவு தினம் முதல்வர், துணை முதல்வர் மரியாதை

சென்னை; சுதந்திர போராட்ட வீரர், தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு, முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

தீரன் சின்னமலையின், 216வது நினைவு தினம், நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. அதையொட்டி, தமிழக அரசு சார்பில், சென்னை, கிண்டி திரு.வி.க., தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள, அவரது சிலைக்கு, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

பின், அவரது சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, தீரன் சின்னமலை படத்திற்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், செய்தித் துறை இயக்குனர் சங்கர் பங்கேற்றனர்.தமிழக பா.ஜ., தலைவர் முருகன், துணை தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர், தங்கள் வீடுகளில், தீரன் சின்னமலை படத்திற்கு, மலர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
03-ஆக-202010:46:11 IST Report Abuse
Yes your honor எனது சொந்த ஊர் காங்கயம் என்பதில் எனக்கு எப்பொழுதுமே பெருமையுண்டு. இந்த தீரன் சின்னமலை ஒரு காங்கயம் காளை ஆவார். இவர் காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகிலுள்ள பழையகோட்டை என்னும் ஊரைச் சார்ந்தவர். சர்க்கரை மன்றாடியார் குடும்பத்தைச் சார்ந்தவர். மிகுந்த ஆக்ரோஷ குணமுள்ள ஒரு விடுதலைப் போராளியாகத் திகழ்ந்தவர் என்று சொல்லுவார்கள். காங்கயம் மன்னன் ஆங்கிலேயருக்குச் செலுத்த வேண்டிய தனது கப்பத்தை ஊத்துக்குளி அருகிலிருக்கும் ஆங்கிலேயரிடம் செலுத்துமாறு கூறி மூன்று காவலர்களிடம் கொடுத்து அனுப்பியுள்ளான். ஊத்துக்குளி அருகிலிருக்கும் அந்த ஆங்கிலேயர், கொடூர குணம் கொண்டவரெனவும், பெண்கள் விடயத்தில் சரியில்லாதவர் என்பது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் உள்ளவர். அவரை கடுமையாக எதிர்த்துவந்தார் இந்த சின்னமலை. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி என்பதாகும். காங்கயத்திலிருந்து ஊத்துக்குளி செல்ல சிவன்மலையைச் சுற்றித் தான் செல்ல வேண்டும். இந்த சிவன் மலைதான் ஆண்டவர் உத்தரவுப் பெட்டி என்னும் ஓர் அதிசயத்தை நிகழ்த்துவது. ஊத்துக்குளி சென்னிமலையின் மறுபக்கம் உள்ளது. நத்தக்காடையூர் சிவன்மலைக்கும் சென்னிமலைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு முக்கோண அமைப்பில் அமைந்துள்ளது. காவலர்கள் காங்கய மன்னன் கொடுத்தனுப்பி இருக்கும் கப்பப் பொருட்களை குதிரையில் வைத்து கொண்டு சென்றுகொண்டிருந்தனர். சிவன்மலையைத் தாண்டி சென்னிமலைப் பாதையில் சென்று கொன்டிருந்த பொழுது, நத்தக் காடையூரிலிருந்து வரும் சந்திப்பில் கப்பத்தைக் கொண்டு செல்லும் காவலர்களை இடைமறித்த தீர்த்தகிரி அவர்களை கப்பத்தை செலுத்தக் கூடாது எனவும் திரும்பிச் செல்லும்படியும் ஊத்துக்குளியில் இருக்கும் அந்த ஆங்கிலேயன் நம் நாட்டு மக்கள் மூலம் எந்தப் பயனும் அடையக்கூடாது எனவும் முருகல் செய்துள்ளான். ஆனால் மன்னனின் உத்தரவை மீற இயலாத காவலர்கள் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டனர். தீர்த்தகிரி ஒரே ஆள் ஒன்பதுபேரை அடிக்கும் வல்லவன். காவலர்களிடமிருந்த கப்பப் பணம், கப்பப் பொருட்கள் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டுவிட்டான். அதற்கு காவலர்கள் காங்கய மன்னனும், அந்த ஆங்கிலேயனும் கேட்டால் என்ன சொல்வது என்று கேட்டபொழுது, 'சிவன்மலைக்கும் சென்னிமலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்துக் கொண்டது என்று கூறுங்கள்' என்று வீரகர்ஜனை செய்துள்ளான். அதன் பிறகு, இந்த சின்னமலையை, நத்தக்காடையூரில் உள்ள சிவங்கோவில் திருவிழாவின் போது தேர்ச் சக்கரத்தில் கட்டிவைத்து ஊர் மக்கள் முன்பாகவே அந்த ஆங்கிலேயன் அடித்தே கொன்றான் என்று தீரன் சின்னமலையின் வரலாற்றை எங்கள் பகுதியில் உணர்ச்சியுடன் கூறுவார்கள். இவர்களைப் போன்ற பல உயிர்களைப் பலிகளைக் கொடுத்துத்தான் நாம் சுதந்திரம் பெற்றுள்ளொம். அந்தச் சுதந்திரத்தின் மூலம் தான் மக்களாட்சி என்றும் தேர்தல் என்றும் கூறுகின்றோம். ஆனால், இன்று..? 20 ரூ. டோக்கன் வாங்கி இந்த உயிர்ப்பலிகளை மிகவும் கொச்சைப்படுத்துகிறோம். காங்கிரஸும், தி.மு.க.வும் ஊழலில் திளைத்து ஆயிரம் கோடிகளை சுருட்டி பெற்ற சுதந்திரத்தை காசாக்கி கேவலப்படுத்திவிட்டார்கள். காங்கிரஸையும், தி.மு.க.வையும் நினைத்தால் மனது வலிக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X