பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச அளவிலான வானியல் போட்டி: உடுமலை மாணவி வெற்றி

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 சர்வதேச அளவிலான வானியல் போட்டி: உடுமலை மாணவி வெற்றி

உடுமலை:சர்வதேச அளவில் நடந்த வானியல் போட்டியில் உடுமலையைச் சேர்ந்த மாணவி அக்ஷயா வெற்றி பெற்றுள்ளார்.உடுமலை, கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.மத்திய மற்றும் மாநில அரசு அறிவியல் துறைகள், நிறுவனங்கள் நடத்தும் போட்டிகள் குறித்தும் மாணவர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி அவர்களை போட்டிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.இதன் அடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களில், மூன்று நிலைகளில் சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் போட்டிகள் நடப்பது குறித்து, உடுமலை சுற்றுப்பகுதி மாணவர்களுக்கு, கலிலியோ அறிவியல் கழகத்தினர் அறிவுறுத்தினர்.மேலும் விருப்பமுள்ள மாணவர்களுக்கு, கழகத்தினர், 'ஆன்லைன்' மூலம் பயிற்சி அளித்தும் வருகின்றனர். இவ்வாறு பயிற்சி பெற்ற, உடுமலை சீனிவாசா பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 1 வகுப்பு மாணவி அக்ஷயா, சர்வதேச அளவில் நடந்த வானியல் மற்றும் வானியற்பியல் போட்டியில் இறுதி சுற்று வரை தேர்வு பெற்று, முதல் பத்து இடங்களில் ஒருவராக வெற்றி பெற்றுள்ளார்.கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறுகையில், ''விருப்பமுள்ள மாணவர்கள் இதுபோன்ற போட்டிகளை பயன்படுத்தி தங்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ளலாம். பெற்றோர்களும் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-ஆக-202019:37:04 IST Report Abuse
Muruganandam.P Congratulations Miss Akshaya
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X