சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லுக்குழி நீரில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி

Added : ஆக 02, 2020
Share
Advertisement

ஆனைமலை:கோட்டூர், தென்சங்கம்பாளையம் நஞ்சப்பா நகரை சேர்ந்த சண்முகவடிவேல் மகன் கண்டேஸ்வரன், 26; கூலித்தொழிலாளி.இவர், நேற்று முன்தினம் மாலை, இரண்டு நண்பர்களுடன் அப்பகுதியிலுள்ள, கைவிடப்பட்ட கல்குவாரியில் கல்லுக்குழிக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து, முகம், கைகள் கழுவுவதற்காக தனியாக கல்லுக்குழிக்கு சென்ற போது, எதிர்பாராத விதமாக கால்தவறி கல்லுக்குழி நீரில் மூழ்கினார்.நீண்ட நேரமாக இவரை காணாததால், நண்பர்கள், இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின், போலீசார், பொள்ளாச்சி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கண்டேஸ்வரனின் சடலத்தை மீட்டனர். கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X