பொது செய்தி

இந்தியா

அமித் ஷா, பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா

Updated : ஆக 04, 2020 | Added : ஆக 02, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Amit Shah, Banwarilal Purohit, Corona Virus, Covid19

புதுடில்லி; மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா, 55, சமூக வலைதளத்தில் நேற்று தெரிவித்து உள்ளதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறி இருந்ததை அடுத்து, மருத்துவமனையில் எனக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உடல்நிலை நன்றாக இருந்தாலும், டாக்டர்களின் ஆலோசனையின்படி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும், கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும் படியும், தனிமைப்படுத்தும்படியும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அமித் ஷா, டில்லி அருகே குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே சில உடல்நல பாதிப்புகள் இருப்பதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவமனையில் அனுமதிக்கும்படி, டாக்டர்கள் வலியுறுத்தினர். இதனால், தற்போது அவர், மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உத்தர பிரதேச மாநில, பா.ஜ., தலைவர் ஸ்வதேந்திர சிங்கிற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


கவர்னருக்கு தொற்று:

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னை, கவர்னர் மாளிகையில், கொரோனா நோய் அறிகுறியுடன் இருந்த, 147 ஊழியர்களுக்கு, ஜூலை, 23க்கு முன், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில், 84 பேருக்கு, நோய் தொற்று உறுதியானது. அவர்கள் எல்லாம், கவர்னர் மாளிகையின் பிரதான வாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள். அவர்கள் அனைவரும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, 38 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், கவர்னரின் உதவியாளர் உட்பட, மூவருக்கு மட்டும் நோய் தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பின், கவர்னரின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர். அவர் ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்தது.

எனினும், அவரது உதவியாளருக்கு, கொரோனா தொற்று உறுதியானதால், ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி, கவர்னருக்கு, மருத்துவ அலுவலர் ஆலோசனை வழங்கினார். அதை ஏற்று, கவர்னர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

இந்நிலையில், நேற்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள, காவேரி மருத்துவமனையில், கவர்னருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதில், தொற்று இருப்பது உறுதியானது. மேலும், சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டன. இருப்பினும், கொரோனா நோயின் தாக்கம் குறைவாக இருப்பதாலும், கவர்னர் மாளிகையிலே, தனிமைப்படுத்திக் கொள்ள, காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.

அதை ஏற்று, கவர்னர் தன் மாளிகைக்கு திரும்பினார். அங்கு தனிமையில் உள்ளார். அவரது உடல்நிலையை, காவேரி மருத்துவமனை மருத்துவ குழுவினர், தொடர்ந்து கண்காணிப்பர் என, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
03-ஆக-202015:24:24 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் நல்லவர்களுக்கு எல்லாம் கொரானா கடவுள் சோதிப்பர் அனால் கைவிட மாட்டார் ஜைஹிந்த்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
03-ஆக-202004:25:21 IST Report Abuse
blocked user இருவரும் குணமடைய அந்த மஹாவிஷ்ணுவை பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X