அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக கவர்னருக்கு தொற்று உறுதி

Added : ஆக 02, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை; தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சென்னை, கவர்னர் மாளிகையில், கொரோனா நோய் அறிகுறியுடன் இருந்த, 147 ஊழியர்களுக்கு, ஜூலை, 23க்கு முன், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில், 84 பேருக்கு, நோய் தொற்று உறுதியானது.அவர்கள் எல்லாம், கவர்னர் மாளிகையின் பிரதான வாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள். அவர்கள் அனைவரும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, 38 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், கவர்னரின் உதவியாளர் உட்பட, மூவருக்கு மட்டும் நோய் தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.பின், கவர்னரின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர். அவர் ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்தது.

எனினும், அவரது உதவியாளருக்கு, கொரோனா தொற்று உறுதியானதால், ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி, கவர்னருக்கு, மருத்துவ அலுவலர் ஆலோசனை வழங்கினார். அதை ஏற்று, கவர்னர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இந்நிலையில், நேற்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள, காவேரி மருத்துவமனையில், கவர்னருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதில், தொற்று இருப்பது உறுதியானது.

மேலும், சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டன.இருப்பினும், கொரோனா நோயின் தாக்கம் குறைவாக இருப்பதாலும், கவர்னர் மாளிகையிலே, தனிமைப்படுத்திக் கொள்ள, காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.அதை ஏற்று, கவர்னர் தன் மாளிகைக்கு திரும்பினார். அங்கு தனிமையில் உள்ளார். அவரது உடல்நிலையை, காவேரி மருத்துவமனை மருத்துவ குழுவினர், தொடர்ந்து கண்காணிப்பர் என, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
03-ஆக-202009:18:15 IST Report Abuse
RaajaRaja Cholan சிங்கப்பூர் அமைச்சருக்கு டெங்கு , அங்கு உள்ள செய்தி தாளில் வந்தது , அவர் பொது மருத்துவமனையில் சிக்கிசை "திரு கோவுக்கு இந்த ஆண்டில் வயது 68 ஆகிறது. அவர் இயோ சூ காங் பகுதியில் வசிக்கிறார். அந்தப் பகுதியில் டெங்கிக் காய்ச்சல் அதிகம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் பட்டியலிட்டு இருக்கிறது. இப்போது திரு கோ சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்."
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X