பொது செய்தி

தமிழ்நாடு

'மகிழ்மதி' என்ற இயக்கம் துவக்கினார் சத்யராஜ் மகள்

Added : ஆக 02, 2020
Share
Advertisement
 'மகிழ்மதி' என்ற இயக்கம் துவக்கினார் சத்யராஜ் மகள்

சென்னை; பிரபல ஊட்டச்சத்து நிபுணரான, திவ்யா சத்யராஜ், 'மகிழ்மதி இயக்கம்' என்ற அமைப்பை ஆரம்பித்து உள்ளார்.

நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், மகிழ்மதி இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளார். இது குறித்து, அவர் கூறியதாவது:இந்தியாவில் ஆண்டுக்கு, ஒரு கோடி திருமணங்கள் நடக்கின்றன. அவற்றில் பரிமாறப்படும் உணவில், 30 சதவீதம் வீணாகிறது.

உணவும், ஊட்டச்சத்தும் வசதியுள்ளவர்களுக்கு மட்டும் தான் என்பது நியாயம் இல்லை. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் பாதுகாப்பு தேவை.மகிழ்மதி என்ற பெயர் பாகுபலி படத்தில், இடம் பெற்ற இடமல்ல. என் கனவு இயக்கத்திற்கு ஒரு நல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்தபோது, என் அம்மா மகேஸ்வரி பெயரில், முதல் பாதியை, இயக்கத்தின் பெயரில் இணைத்தேன்.இந்த இயக்கம் அரசியல் கட்சியோ, ஜாதி, மதம் சார்ந்த அமைப்போ இல்லை. வறுமை பகுதிகளுக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட இயக்கம்.

ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல் வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு, தரமான உணவு வழங்குகிறோம். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை இவ்வியக்கம் மேற்கொள்ளும்.இவ்வாறு, திவ்யா சத்யராஜ் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X