பொது செய்தி

தமிழ்நாடு

பழைய கட்டட இடிப்பு டெண்டர் ரத்து

Added : ஆக 02, 2020
Share
Advertisement

சென்னை; நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பழைய கட்டடத்தை, இடித்து அகற்றும் டெண்டரை பொதுப்பணித்துறை ரத்து செய்து உள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், பழமைவாய்ந்த கட்டடங்கள் உள்ளன. இந்த கட்டடங்களில், ஆங்கிலேயர் காலத்தில் எடுத்து வரப்பட்ட இரும்பு பொருட்கள், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் என, கணக்கிடப்பட்டுள்ளது. இப்படி பழமை வாய்ந்த பழைய மாணவர் விடுதி கட்டடத்தை, கொரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்காக இடிக்க, பொதுப்பணி துறையின் மருத்துவகோட்ட பிரிவு வாயிலாக ஏலம் கோரப்பட்டது.

திருநெல்வேலியை சேர்ந்த ஒப்பந்த நிறுவனம், 70 லட்சம் ரூபாய்க்கு, கட்டடத்தை இடிக்க ஏலம் எடுத்தது. கட்டடங்களை இடித்து, அதில் உள்ள பொருட்களை எடுத்து கொள்ள, அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏலத்தொகை குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளதாக, ஒப்பந்ததாரர்களும், இரும்பு வியாபாரிகளும் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்த செய்தி, சில தினங்களுக்கு முன், நம் நாளிதழில் வெளியானது.இதையடுத்து, கட்டடத்தை இடித்து அகற்றும் டெண்டரை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். கட்டடத்தை மறு மதிப்பீடு செய்து, மீண்டும் ஏலம் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இப்பிரச்னை தொடர்பாக, கண்காணிப்பு பொறியாளர் கல்யாணசுந்தரத்திடம், பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன் விளக்கம் கேட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X